ரெப்போ வட்டி விகிதம் 6 ஆக குறைப்பு - வீடு மற்றும் கார்களுக்கான வட்டி குறைகிறதா?
ரெப்போ வட்டி விகித்தை 0.25% குறைப்பதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா அறிவித்துள்ளார்.
ரெப்போ விகிதம் குறைவு
முன்னதாக 2020 ஆம் ஆண்டு மே மாதம் ரெப்போ விகிதம் குறைக்கப்பட்டது. அதன் பிறகு 5 ஆண்டுகள் கழித்து கடந்த பிப்ரவரி மாதம் 6.5 சதவீதத்தில் இருந்து, 6.25 சதவீதமாக குறைக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா தலைமையில் நடைபெற்ற நாணய கொள்கை குழு கூட்டத்தில், 6.25 சதவீதமாக இருந்த ரெப்போ வட்டியை, 0.25 சதவீதம் குறைத்து 6.0 சதவீதமாக இருக்கும் என்று அறிவித்துள்ளார்.
ரெப்போ வட்டி விகிதம் என்பது ரிசர்வ் வங்கியிடமிருந்து வங்கிகள் பெரும் கடனுக்கான வட்டி விகிதம் ஆகும்.
ரெப்போ விகிதம் குறைக்கப்பட்டுள்ளதால் வங்கிகள் ரிசர்வ் வங்கியிடம் அதிக கடன் பெற முடியும். இதனால் மக்கள் வங்கியிடமிருந்து கார், வீடுகளுக்கான கடன்கள் வாங்கியிருந்தால் அதற்கான வட்டி குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |