இனி கடனை திருப்பி செலுத்தாவிட்டால் மொபைல்போன் இயங்காது - RBI புதிய திட்டம்
கடனை திரும்ப செலுத்தாவிட்டால், மொபைல்போனை முடக்கும் திட்டம் குறித்து RBI ஆலோசித்து வருகிறது.
கடனில் வாங்கப்படும் மொபைல்போன்கள்
உலகளவில் மொபைல் போன் அத்தியாவசிய ஒன்றாக மாறிவிட்டது.இந்தியாவில் உள்ள 140 கோடி மக்கள் தொகையில், 120 கோடி பேர் மொபைல்போன் இணைப்பு வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
2024 ஆம் ஆண்டின் ஆய்வு ஒன்று, இந்தியாவில், ஸ்மார்ட் போன் உள்ளிட்ட மின்னணு சாதனங்களில் மூன்றில் ஒரு பங்கு கடன் மூலம் வாங்கப்படுவதாக கூறப்படுகிறது.
இதில், பெரும்பாலும் ஒரு லட்சத்திற்கு குறைவான கடன்கள் திருப்பி செலுத்தப்படாமல், வாரா கடன்களாக உள்ளதாக கூறப்படுகிறது.
இவ்வாறான வாராக்கடன் அதிகரிப்பதை தடுக்கும் வகையில், ரிசர்வ் வங்கி புதிய திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
முடங்கும் மொபைல்போன்
இதன்படி, கடனில் வாங்கும் செல்போன்கள், கடனை முழுவதுமாக திருப்பி செலுத்தப்படாவிட்டால், அந்த மொபைல்போனை முடக்கும் வசதியை கடன் வழங்கும் நிதி நிறுவனங்களுக்கு வழங்க உள்ளது.
இதற்காக, கடனில் வாங்கப்படும் மொபைல்போனில் செயலி ஒன்று நிறுவப்படும். இதன் மூலம், கடனை திருப்பி செலுத்தாதவர்களின் மொபைல்போனை நிதி நிறுவனங்கள் முடக்க முடியும்.
அதேவேளையில், நுகர்வோர்களின் ஒப்புதலுடனே இந்த செயலி மொபைல்போனில் நிறுவப்படும். மேலும், மொபைல்போனில் உள்ள நுகர்வோர்களின் தனிப்பட்ட தரவுகளை நிதி நிறுவனங்கள் அணுக முடியாது எனவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |