ஹர்திக்கின் படையை கடைசி ஓவரில் முடித்துவிட்ட சகோதரர் க்ருனால் பாண்ட்யா! மும்பை இந்தியன்ஸை வீழ்த்திய RCB
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி த்ரில் வெற்றி பெற்றது.
கோஹ்லி, பட்டிதார் அரைசதம்
வான்கடே மைதானத்தில் நடந்த போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி முதலில் துடுப்பாடியது.
விராட் கோஹ்லி 67 (42) ஓட்டங்களும், அணித்தலைவர் ரஜத் பட்டிதார் 64 (32) ஓட்டங்களும் விளாசினர்.
கடைசி கட்டத்தில் ருத்ர தாண்டவமாடிய ஜித்தேஷ் ஷர்மா 19 பந்துகளில் 40 ஓட்டங்கள் (4 சிக்ஸர், 2 பவுண்டரிகள்) எடுக்க, மும்பை இந்தியன்ஸ் 221 ஓட்டங்கள் குவித்தது.
ஹர்திக் அதிரடி வீண்
பின்னர் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணியில் திலக் வர்மா 56 (29) ஓட்டங்களும், ஹர்திக் பாண்ட்யா 41 (15) ஓட்டங்களும் விளாசினர்.
கடைசி ஓவரில் 19 ஓட்டங்கள் தேவைப்பட்ட நிலையில், க்ருனால் பாண்ட்யா தனது மேஜிக் பந்துவீச்சில் விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதன்மூலம் மும்பை இந்தியன்ஸ் 209 ஓட்டங்கள் எடுத்து 12 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியுற்றது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |