கோஹ்லி, வெங்கடேஷ் ஐயரின் சரவெடி ஆட்டம்: பஞ்சாபை நொறுக்கி ப்ளேஆஃப்பிற்கு RCB தகுதி
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி அபார வெற்றி பெற்றது.
விராட் கோஹ்லி விளாசல்
தரம்சாலாவில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதிய போட்டி நடந்தது.

முதலில் ஆடிய பெங்களூரு அணியில் தேவ்தத் படிக்கல் சரவெடியாக 25 பந்துகளில் 45 ஓட்டங்கள் விளாசி ஆட்டமிழந்தார்.
பின்னர் அதிரடி அரைசதம் விளாசிய விராட் கோஹ்லி (Virat Kohli) 37 பந்துகளில் 58 ஓட்டங்கள் (3 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகள்) குவித்தார்.
ருத்ர தாண்டவம் ஆடிய வெங்கடேஷ் ஐயர் (Venkatesh Iyer) கடைசிவரை களத்தில் நின்று, 40 பந்துகளில் 4 சிக்ஸர்கள், 8 பவுண்டரிகளுடன் 73 ஓட்டங்கள் விளாசினார்.

அவருடன் பார்ட்னர்ஷிப் அமைத்த டிம் டேவிட் 12 பந்துகளில் 28 ஓட்டங்கள் (2 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகள்) எடுக்க, பெங்களூரு அணி 222 ஓட்டங்கள் குவித்தது. ஹர்ப்ரீத் பிரார் 2 விக்கெட்டுகளும், அர்ஷ்தீப் சிங் மற்றும் சஹால் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.
அதனைத் தொடர்ந்து ஆடிய பஞ்சாப் கிங்ஸ் 19 ஓட்டங்களுக்கு மூன்று முக்கிய விக்கெட்டுகளை இழந்தது. அடுத்து அதிரடி காட்டிய கூப்பர் கோனொலி 22 பந்துகளில் 37 ஓட்டங்கள் விளாசி ஆட்டமிழந்தார்.
பஞ்சாப் தோல்வி
பின்னர் சுயான்ஷ் ஷெட்கே 35 (22) ஓட்டங்களும், மார்க்ஸ் ஸ்டோய்னிஸ் 37 (25) ஓட்டங்களும் விளாசி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
வெற்றிக்காக போராடிய ஷஷாங்க் சிங் (Shashank Singh) 27 பந்துகளில் 56 ஓட்டங்கள் விளாசிய நிலையில் அவுட் ஆனார்.

பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 199 ஓட்டங்களே எடுத்ததால் 23 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வெற்றி பெற்றது.
13 போட்டிகளில் 9வது வெற்றியைப் பெற்றுள்ள ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 18 புள்ளிகளுடன் ப்ளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றது.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |