தகாத வார்த்தைகளை பயன்படுத்திய RCB பயிற்சியாளர் - BCCI நடவடிக்கை
தகாத வார்த்தைகளை பயன்படுத்திய RCB பயிற்சியாளருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
தகாத வார்த்தைகளை பேசிய RCB பயிற்சியாளர்
ஐபிஎல் தொடரில் நேற்று ராய்பூரில் நடைபெற்ற போட்டியில், மும்பை இந்தியன்ஸ்(MI) மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு(RCB) அணிகள் மோதியது. இதில், RCB அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
RCB அணி துடுப்பாட்டம் ஆடிய போது, 18.2 ஓவரில் க்ருணால் பாண்டியா அடித்த பந்தை மும்பை வீரர்கள் நமன் திர் மற்றும் திலக் வர்மா கேட்ச் செய்யாமல் விட்டனர்.
இந்த பந்து சிக்ஸரா இல்லையா என்பதை தீர்மானிக்க நடுவர்கள் நீண்ட நேரம் எடுத்துக்கொண்டனர். இதனையடுத்து அடுத்து சிக்ஸர் இல்லை என அறிவிக்கப்பட்டது.

இதனால் ஆத்திரமடைந்த RCB அணியின் தலைமை பயிற்சியாளர் ஆண்டி பிளவர் 4வது நடுவருடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
வாக்குவாதத்தின் போது ஆண்டி பிளவர் தகாத வார்த்தைகளை பயன்படுத்தியது, அங்கிருந்த மைக்கின் மூலம் உறுதி செய்யப்பட்டது.
ஆண்டி பிளவருக்கு அபராதம்
ஐபிஎல் நடத்தை விதிகளின்படி லெவல் 1 விதிமீறலில் (பிரிவு 2.3) ஆண்டி பிளவர் ஈடுபட்டது கண்டறியப்பட்டது.

ஆண்டி பிளவர் தனது தவறை ஒப்புக்கொண்ட நிலையில், போட்டி கட்டணத்தில் இருந்து 15% அபராதம் விதிக்கப்படுவதாக போட்டி நடுவர் அமித் சர்மா அறிவித்த தண்டனையும் ஏற்றுக்கொண்டார்.
58 வயதான மூத்த வீரரான ஆண்டி பிளவரின் செயல் கிரிக்கெட் உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
1992 முதல் 2003 வரை ஜிம்பாப்வே தேசிய அணிக்காக விளையாடிய ஆண்டி பிளவர் அந்த அணியின் அணித்தலைவராக இருந்துள்ளார்.

அதன் பின்னர் பிரித்தானிய குடியுரிமை பெற்ற இவர் இங்கிலாந்து அணியின் துணை பயிற்சியாளர் மற்றும் பல்வேறு லீக் அணிகளுக்கு பயிற்சியாளராக இருந்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |