POCSO வழக்கில் சிக்கிய வீரரை தக்கவைத்த RCB - கொந்தளிக்கும் ரசிகர்கள்
POCSO வழக்கில் சிக்கிய வீரரை RCB அணி தக்கவைத்தது, ரசிகர்களுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது.
யாஷ் தயாள்
உத்திரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்த யாஷ் தயாள், 2024 ஐபிஎல் தொடரில் இருந்து RCB அணிக்காக விளையாடி வருகிறார்.

2025 ஐபிஎல் தொடரில், 15 போட்டிகளில் விளையாடி,13 விக்கெட்களை வீழ்த்தினார்.
கடந்த 5 மாதங்களுக்கு முன்னர், உத்திரப்பிரதேசத்தை சேர்ந்த பெண் ஒருவர் யாஷ் தயாள் மீது பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்தார்.
திருமணம் செய்வதாக கூறி, 5 ஆண்டுகள் என்னை உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் என்னை பயன்படுத்தி ஏமாற்றி விட்டார். 2023 ஆம் ஆண்டில் நான் 17 வயதாக இருக்கும் போது என்னிடம் தவறாக நடந்து கொண்டார்.

அவரின் நோக்கம் தெரிந்து விலக முயற்சித்த போது, என்னை கடுமையாக தாக்கினார். மேலும், இதே போல் பல பெண்களை அவர் ஏமாற்றியது தெரியவந்துள்ளது" என தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, போக்சோ உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் யாஷ் தயாளின் மீது காஜியாபாத் மற்றும் ஜெய்ப்பூரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
UT20 லீக்கில் தடை
இந்த வழக்கின் தீவிரம் காரணமாக, கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற உத்தரப்பிரதேச T20 லீக்கில் அவர் பங்கேற்பது தடை செய்யப்பட்டது.

இந்நிலையில், வரும் டிசம்பர் 16 ஆம் திகதி, 2026 ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் அபுதாபியில் நடைபெற உள்ளது.
இதனிடையே நேற்று அணியில் தக்க வீரர்களின் பட்டியலை 10 ஐபிஎல் அணிகளும் அறிவித்தது.
இதில் RCB அணி யாஷ் தயாள் உள்ளிட்ட 17 வீரர்களை தக்க வைத்துள்ளது.
பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக விசாரணை நடைபெற்று வரும் நிலையில், யாஷ் தயாளை விடுவிக்காமல் தக்க வைத்தது தவறான சம்பவம் என ரசிகர் RCB அணி நிர்வாகத்தை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |