ஃப்ளே ஆப்பிற்கு பெங்களூரு முதல் அணியாக தகுதிபெறுமா? இன்று தெரியப்போகும் முடிவு
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஃப்ளே ஆப் சுற்றில் முதல் அணியாக நுழையுமா என்பது இன்று தெரிந்துவிடும்.
ஃப்ளே ஆப்
ஐபிஎல் 2025 தொடரின் நேற்றையப் போட்டி மழையால் கைவிடப்பட்டது. இதனால் இரு அணிகளும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.
12 புள்ளிகளை மட்டுமே கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தொடரைவிட்டு வெளியேறியது. அதே சமயம் பெங்களூரு அணி 17 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தில் உள்ளது.
எஞ்சிய இரண்டு போட்டிகளில் ஒரு வெற்றி அல்லது ஒரு புள்ளியை பெற்றாலே பெங்களூரு ஃப்ளே ஆப்பினை உறுதி செய்துவிடும்.
முதல் அணியாக
எனினும், இன்றையப் போட்டிகளின் முடிவை பொறுத்துக் கூட முதல் அணியாக பெங்களூரு ஃப்ளே ஆப் சென்றுவிடும்.
அதாவது, இன்று நடைபெற உள்ள போட்டிகளில் பஞ்சாப் அல்லது டெல்லி ஆகிய இரு அணிகளில் ஒரு அணி தோல்வியடைந்தால் RCB முதலாவதாக தகுதிப் பெற்றுவிடும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |