POCSO வழக்கில் கைதாகும் RCB வீரர்? முன் பிணை வழங்க நீதிமன்றம் மறுப்பு
POCSO வழக்கில் RCB வீரருக்கு நீதிமன்றம் முன் பிணை வழங்க மறுத்துள்ள நிலையில், அவர் கைதாகும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
யாஷ் தயாள்
உத்திரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்த யாஷ் தயாள், 2024 ஐபிஎல் தொடரில் இருந்து RCB அணிக்காக விளையாடி வருகிறார். 2026 ஐபிஎல் தொடருக்காகவும், அணியில் தக்க வைக்கப்பட்டுள்ளார்.

சில மாதங்களுக்கு முன்னர், உத்திரப்பிரதேசத்தை சேர்ந்த பெண் ஒருவர், யாஷ் தயாள் தன்னை திருமணம் செய்வதாக கூறி, 5 ஆண்டுகள் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் பயன்படுத்தி ஏமாற்றி விட்டதாக பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்தார்.

2023 ஆம் ஆண்டில் நான் 17 வயதாக இருக்கும் போது என்னிடம் தவறாக நடந்து கொண்டதாக புகாரில் தெரிவித்த நிலையில், யாஷ் தயாள் மீது காஜியாபாத் மற்றும் ஜெய்ப்பூரில் POCSO சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
முன் பிணை வழங்க மறுப்பு
இந்த வழக்கில்,கைதாவதை தடுக்கும் வகையில் முன் பிணை வழங்குமாறு யாஷ் தயாள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ள நிலையில், ஜெய்ப்பூர் நீதிமன்றம் முன் பிணை வழங்க மறுத்துள்ளது.
தயாளின் வழக்கறிஞர், புகார்தாரரை ஒருபோதும் தனிப்பட்ட முறையில் சந்தித்ததில்லை எனவும், அனைத்து தொடர்புகளும் பொது இடங்களில் நடந்தன எனவும் வாதிட்டுள்ளார்.

மேலும், அந்த பெண் தன்னை வயது வந்தவராக காட்டி, பண உதவி கோரியே அவர் அணுகியதாகவும், இது பணம் பறிக்கும் முயற்சியில் பொய்யான குற்றச்சாட்டுகளை கூறி ஜோடிக்கப்பட்ட வழக்கு என வாதிட்டுள்ளார்.
புகார் அளித்த பெண்ணின் மொபைல்போனில் இருந்து, அரட்டைகள், புகைப்படங்கள், வீடியோக்கள், அழைப்பு விவரப் பதிவுகள் மற்றும் ஹோட்டல் முன்பதிவு விவரங்களை காவல்துறை கைப்பற்றியுள்ள நிலையில், அது POCSO குற்றச்சாட்டுக்கு உரிய ஆதாரங்களா என ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
இந்த கட்டத்தில் முன் பிணை வழங்கப்பட்டால், விசாரணையில் தலையீடும் அபாயம் இருப்பதாக குறிப்பிட்ட நீதிமன்றம் முன் பிணை வழங்க மறுத்துள்ளது.
இதனால், யாஷ் தயாள் கைது செய்ய வாய்ப்புள்ளதகவும் கருதப்படுகிறது. இந்த வழக்கின் தீவிரம் காரணமாக, கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற உத்தரப்பிரதேச T20 லீக்கில் அவர் பங்கேற்பது தடை செய்யப்பட்டது.
இருப்பினும், RCB அணி அவரை தக்க வைத்துள்ள நிலையில், வழக்கு விசாரணையை பொறுத்து அவர் 2026 ஐபிஎல் தொடரில் பங்கேற்பது முடிவு செய்யப்படும்.
யாஷ் தயாள் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டால், அவருக்கு பதிலாக மங்கேஷ் யாதவிற்கு வாய்ப்பு வழங்கப்படும்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |