இளைஞரை தேடும் கனடாவின் RCMP காவல்துறை: விடுக்கப்பட்டுள்ள பொது எச்சரிக்கை!
கனடாவின் நோவா ஸ்கோஷியா பகுதியில் ஆபத்தான 26 வயது இளைஞரை ராயல் கனடியன் மவுண்ட் பொலிஸ் (RCMP) வலைவீசி தேடி வருகிறது.
தேடுதலை முடக்கிவிட்டுள்ள RCMP
நோவா ஸ்கோஷியாவின்(Nova Scotia) கிழக்குக் கரையோரத்தின் மேற்கு பெட்பெஸ்விக் (West Petpeswick) பகுதியில் 26 வயதான பிராண்டன் க்ராஃபோர்ட் கிராண்ட் என்ற இளைஞரை ராயல் கனடியன் மவுண்ட் பொலிஸார் (RCMP) தேடி வருகிறது.
காரணமின்றி தப்பி ஓடியதற்காக கிராண்ட் மீது மாகாணம் முழுவதும் கைது வாரன்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
புதன்கிழமை இரவு, சுமார் 9:30 மணியளவில், வெஸ்ட் பெட்பெஸ்விக் ரோட்டில் உள்ள ஒரு வீட்டில் மனநிலை பாதிக்கப்பட்ட ஒரு மனிதர் இருப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது.
இறுதியில் அந்த நபர் கிராண்ட் தான் என்பது உறுதிப்படுத்தப்பட்டது. அவர் வீட்டை கோடரியால் சேதப்படுத்தி காட்டுக்குள் ஓடிவிட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
நீக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கை
முன்னெச்சரிக்கையாக, ட்வின் ஓக்ஸ் நினைவு மருத்துவமனை தற்காலிகமாக மூடப்பட்டது, ஆனால் தற்போது மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
அத்துடன் கிழக்கு கரை மாவட்ட உயர்நிலைப் பள்ளியும் பாதுகாப்பு நடவடிக்கையில் வைக்கப்பட்டிருந்தது, ஆனால் அதுவும் தற்போது நீக்கப்பட்டுள்ளது.
தேடல் நபர் குறித்த அடையாளங்கள்
கிராண்ட் உயரமானவர், ஆறு அடி நான்கு அங்குலம் உயரமும், 300 பவுண்ட் எடையும் கொண்டவர். அவருக்கு பழுப்பு நிற முடி மற்றும் பழுப்பு நிற கண்கள் உள்ளன.
பிரண்டன் கிராண்ட்டை நீங்கள் பார்த்தால் அல்லது அவர் எங்கிருக்கிறார் என்பது குறித்து ஏதேனும் தகவல் இருந்தால், அவரை நெருங்க வேண்டாம். உடனடியாக 911 ஐ அழைக்கவும் என பொது எச்சரிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |