அமைதி வேண்டும்... ட்ரம்பை சந்திக்கத் தயார்: புடின் திடீர் முடிவு
உக்ரைனுடன் அமைதி வேண்டும் என்று முதன்முறையாகத் தெரிவித்துள்ள ரஷ்ய ஜனாதிபதியான புடின், ட்ரம்பை சந்திக்கத் தயார் என்றும் கூறியுள்ளார்.
ஊடகவியலாளர்களை சந்தித்த புடின்
நேற்று வியாழக்கிழமை, கிரெம்ளினில், நான்கு மணி நேரம் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார் ரஷ்ய ஜனாதிபதியாகிய புடின்.
பல்லாயிரம் உயிர்களை பலி கொடுத்தபின், இப்போது உக்ரைனுடன் சமாதானம் செய்துகொள்ள விரும்புவதாகத் தெரிவித்துள்ளார் புடின்.
அத்துடன், தான் அமெரிக்க ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ட்ரம்பை சந்திக்கத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார் ட்ரம்ப்.
இருவரும் சந்தித்து விவாதிக்க பல விடயங்கள் உள்ளன என்று கூறியுள்ளார் புடின். ஆனால், இதுவரை ட்ரம்ப் அவரை தொடர்பு கொண்டதாகத் தெரியவில்லை.
இதற்கிடையில், விரைவில் ரஷ்யாவுடன் போர் செய்ய உக்ரைனில் ஆட்களே இருக்கமாட்டார்கள் என்றும் கூறியுள்ள புடின், நாங்கள் பேச்சுவார்த்தைக்குத் தயார். ஆனால், உக்ரைன், பேச்சுவார்த்தைகளுக்கும் சமரசத்தும் தயாராகவேண்டியிருக்கும் என்கிறார்.
மேலும், போர் நிறுத்தம் என்பது, எதிரி தன் படைகளையும் ஆயுதங்களையும் தயார் செய்ய கால அவகாசம் கொடுக்கும் விடயமாகத்தான் இருக்கும், அது எதிரியை தன் படைகளை வலுப்படுத்த மட்டுமே உதவியாக இருக்கும் என்றும் கூறியுள்ளார் புடின்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |