போர்க்களத்தில் அடுத்த கட்டத்திற்கு நாங்கள் தயார்... ஈரான் விடுத்த மிரட்டல்
டொனால்ட் ட்ரம்பின் இரண்டு வார கால போர் நிறுத்தத்தை, போருக்குத் தயாராவதிலேயே செலவிட்டதாக ஈரான் தெரிவித்துள்ளது.
படைகள் தயார் நிலையில்
புதன்கிழமையன்று தற்காலிக போர் நிறுத்தம் முடிவடைகிறது. இந்நிலையில், புதிய தாக்குதல்களைத் தொடுக்கவும், ஈரானில் எஞ்சியிருப்பவற்றைத் தகர்க்கவும் ஆயிரக்கணக்கான அமெரிக்கப் படைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதால், மத்திய கிழக்கு மோதல் மீண்டும் தீவிரமடையக்கூடும் என்ற அச்சம் நிலவுகிறது.

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில், முக்கியத்துவம் வாய்ந்த இரண்டாவது சுற்று அமைதிப் பேச்சுவார்த்தைகள் விரைவில் மீண்டும் தொடங்கவிருக்கின்றன. ஆனால் அதில் ஈரான் கலந்துகொள்ள வாய்ப்பில்லை என்றே அறிவித்துள்ளது.
இதனிடையே, போருக்கு ஒரு நிரந்தர முடிவு எட்டப்படாவிட்டால், இரண்டு வார கால போர் நிறுத்தம் காலக்கெடுவிற்குப் பிறகு நீட்டிக்கப்படுவது மிகவும் சாத்தியமற்றது என்று ட்ரம்ப் ஏற்கனவே கூறியுள்ளார்.
நாங்கள் ஏற்பதில்லை
இந்த நிலையில், ஈரானின் முதன்மைப் பேச்சுவார்த்தையாளர் தற்போது ஒரு திடுக்கிடும் அறிக்கையை வெளியிட்டுள்ளார்; அதில், கடந்த பதினைந்து நாட்களாகப் போர்நிறுத்தம் நிலவியது, ஈரான் மீண்டும் எழுந்து போராடவே உதவியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அச்சுறுத்தல்களின் நிழலில் நடைபெறும் பேச்சுவார்த்தைகளை நாங்கள் ஏற்பதில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், கடந்த இரண்டு வாரங்களாக, போர்க்களத்தில் புதிய யுத்திகளை வெளிப்படுத்த நாங்கள் தயாரானதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆனால், தங்கல் நிபந்தனைக்கு உட்பட்டு எந்தவொரு ஒப்பந்தமும் எட்டப்படாவிட்டால், ஈரானின் அனைத்து மின் நிலையங்களையும் பாலங்களையும் தகர்த்தெறிவதாக ட்ரம்ப் சூளுரைத்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |