இந்தியாவுடன் இணைந்து செயல்பட தயாராக உள்ளோம் - சீனா
இந்தியாவுடன் இணைந்து செயல்பட தயாராக உள்ளதாக சீனா தெரிவித்துள்ளது.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்ட கருத்துகளுக்கு சீன வெளியுறவு அமைச்சகம் நேர்மறையான பாராட்டை தெரிவித்துள்ளது.
கடந்த அக்டோபரில் கஜானில் நடைபெற்ற மோடி-ஷி ஜின்பிங் சந்திப்பு, இருநாட்டு உறவுகளை மேம்படுத்த முக்கிய வழிகாட்டுதலாக அமைந்ததாக சீனா குறிப்பிட்டது.
சீன வெளிவிவகார அமைச்சக பேச்சாளர் கூறியதாவது:
"இந்திய பிரதமரின் சமீபத்திய நேர்மறையான கருத்துக்களை சீனா பாராட்டுகிறது. இந்தியா-சீனா இடையிலான உறவு 2,000 ஆண்டுகளாக பரஸ்பர புரிதல் மற்றும் நட்புறவின் அடிப்படையில் வளர்ந்துள்ளது. இரு நாட்டு தலைவர்கள் எட்டிய புரிதல்களை நடைமுறைப்படுத்த சீனா இந்தியாவுடன் இணைந்து செயல்படத் தயாராக உள்ளது." என கூறியுள்ளார்.
இரு நாடுகளும் பாரிய வளர்ச்சியடைந்த பொருளாதாரமாக இருப்பதால், ஒருவரை ஒருவர் ஆதரிக்க வேண்டும் என்றும், இது 2.8 பில்லியன் மக்களின் அடிப்படை நலன்களுக்கு ஏற்றது என்றும் சீனா தெரிவித்தது.
புதிய ஒத்துழைப்பிற்கான வாய்ப்பு:
இந்தியா-சீனா உறவின் 75-வது ஆண்டு வாய்ப்பாக பயன்படுத்தி, பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்த சீனா ஆர்வமாக உள்ளது.
2023 அக்டோபரில் இரு நாடுகளும் லடாக் எல்லையில் விலகுதல் தொடர்பான ஒப்பந்தத்தை நிறைவேற்றியுள்ளன.
சர்வதேச வளர்ச்சி மற்றும் உலக அமைதி, ஸ்திரத்தன்மை, வளம் ஆகியவற்றுக்கு இந்தியா-சீனா ஒத்துழைப்பு முக்கியமானது என சீனா குறிப்பிட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |