முழங்கால் வரை அல்ல, குதிகால் வரை வளர்ந்த முடியுடன் வலம் வரும் அழகிய இளம்பெண்
முழங்கால் வரை முடி வளர என்ன செய்வது என்பதைக் குறித்து இப்போதெல்லாம் ஊடகங்களில் செய்திகள் வருவது சகஜமாகிவிட்டது.
ஆனால், முழங்கால் வரை அல்ல, குதிகால் வரை, சில நேரங்களில் தரையைத் தொடும் அளவுக்கு வளர்ந்த அழகிய பொன்னிறக் கூந்தலுடன் வலம் வருகிறார் அழகிய இளம்பெண் ஒருவர்.
குதிகால் வரை வளர்ந்த முடியுடன் வலம் வரும் இளம்பெண்
Tangled என்றொரு ஆங்கிலத் திரைப்படம் உண்டு. அதன் கதாநாயகியான Rapunzelஇன் தலைமுடியின் நீளம் 70 அடி.
உக்ரைன் நாட்டவரான அலெனா Alena Kravchenko (39), 5அடி 9 அங்குல நீள கூந்தலுடன் வலம் வருவதால், அவரை ’real life Rapunzel’ என்றே அழைக்கிறார்கள்.
ஆனால், அலெனாவுக்கு இந்த கூந்தல் ஒரு வாரத்திலெல்லாம் வளரவில்லை. 30 ஆண்டுகளாக அவர் இந்தக் கூந்தலை கவனமாக பராமரித்து வளர்த்து வருகிறார்.
இவ்வளவு நீள கூந்தலை பராமரிப்பதும் எளிதல்ல. வாரத்துக்கு ஒரு முறை தன் கூந்தலை அலசி முடிப்பதற்கே ஒரு மணி நேரம் ஆகிறதாம்.
ஒரு நாளைக்கு இருமுறை தலைசீவி, கூந்தலின் நுனியை ஆறு மாதத்துக்கு ஒரு முறை ட்ரிம் செய்து, இயற்கை மற்றும் கூந்தல் பராமரிப்பில் பயன்படுத்தப்படும் வழக்கமான தயாரிப்புகளையும் பயன்படுத்தி தன் கூந்தலை பராமரிக்கிறார் அலெனா.
அலெனாவை இன்ஸ்டாகிராமில் 210,000 பேர் பின் தொடர்கிறார்கள். இந்த நீண்ட கூந்தல் தன்னை மற்றவர்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டுவதால் தனக்கு மகிழ்ச்சி என்று கூறும் அலெனா, நீண்ட கூந்தலால் சில பிரச்சினைகளும் உள்ளன என்கிறார். ஆம், சில நேரம் அவரது கூந்தல் மீது அவரே கால் வைத்துவிடுகிறாராம்!
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |