ரியல் மாட்ரிட்டின் முகமாக இன்றும் ரொனால்டோ உள்ளார்! கைலியன் எம்பாப்பே புகழ்ச்சி
கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ-வை ரியல் மாட்ரிட் அணியின் நட்சத்திர வீரர் கைலியன் எம்பாப்பே புகழ்ந்துள்ளார்.
ரொனால்டோவை புகழ்ந்த எம்பாப்பே
உலக கால்பந்து விளையாட்டின் ஜாம்பவான் வீரராக கிறிஸ்டியானோ ரொனால்டோ திகழ்ந்து வருகிறார்.
அவர் ரியல் மாட்ரிட் கிளப் அணியில் இருந்து விலகி தற்போது சவுதியின் அல் நாசர் கால்பந்து கிளப்பில் விளையாடி வருகிறார்.
இந்நிலையில் தற்போதைய ரியல் மாட்ரிட் அணியின் நட்சத்திர வீரரான கைலியன் எம்பாப்பே முன்னாள் ரியல் மாட்ரிட் அணியின் நட்சத்திர வீரரான ரொனால்டோ-வை புகழ்ந்து தள்ளியுள்ளார்.
அதில், ரொனால்டோ ரியல் மாட்ரிட் அணியில் இருந்து பல ஆண்டுகள் முன்பே விலகி இருந்தாலும், இன்றும் இந்த அணியின் முகமாகவே ரொனால்டோ இருக்கிறார்.
மாட்ரிட் மக்கள் இப்போது ரொனால்டோவை பற்றி பெருமையாக பேசி வருகின்றனர் என கைலியன் எம்பாப்பே தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |