ஜப்பானின் தகைச்சி மீது சீனாவின் உக்கிர கோபத்திற்கு காரணம் இதுதான்
தைவான் விவகாரத்தில் ஜப்பான் பிரதமர் தகைச்சியின் கருத்தை கோபத்துடன் எதிர்கொள்ளும் சீனாவின் பின்னணியில் வேறுபல காரணங்கள் இருப்பதாக கூறுகின்றனர்.
கேள்வி கேட்கும் நாடாக
ஜப்பானின் புதிய பிரதமர் தகைச்சி நாட்டின் பாதுகாப்பு கருதி, சீனாவிற்கு எதிராக இராணுவத்தைக் களமிறக்க நேரிடும் என நாடாளுமன்றத்தில் குறிப்பிட்டிருந்தார்.

அதற்கு பதிலளிக்கும் வகையில், ஜப்பான் மீது பொருளாதார நெருக்கடியை அளிக்க சீனா நடவடிக்கை எடுத்து வருகிறது. பயண எச்சரிக்கை முதல், கடல் உணவு இறக்குமதி வரையில் சீனா தடை விதித்துள்ளது.
உலக நாடுகள் பல தைவான் விவகாரத்தில் ஜப்பான் மீது சீனா கோபப்படுவதாக கருதும் நிலையில், ஆசியாவில் மிகப்பெரிய வல்லரசாக உருவாக, பொருளாதார மற்றும் இராணுவ ரீதியாக நடவடிக்கை எடுத்து வரும் சீனாவிற்கு எதிராக கேள்வி கேட்கும் நாடாக ஜப்பான் இருப்பது கவலையைத் தூண்டியுள்ளது.
20 ஆம் நூற்றாண்டில் ஜப்பானின் ஏகாதிபத்திய இராணுவம் சீனா மீது படையெடுத்து, ஆக்கிரமித்து, அட்டூழியங்களை நடத்தியது இன்றும் சீனாவிற்கு அவமானச் சின்னமாகவே உள்ளது.
அந்த காலகட்டத்தில் இருந்து சீன மக்களில் ஜப்பான் விரோத போக்கு இருந்து வருகிறது. மட்டுமின்றி, தீவிர வலதுசாரிகளால் அது சமீபத்திய ஆண்டுகளில் தூண்டப்பட்டும் வருகிறது.
தைவான் குறித்து சமீபத்திய தகைச்சியின் கருத்து, சீனா தம்மை ஒரு வல்லராச அடையாளப்படுத்திக் கொண்டாலும், ஜப்பான் அதை மதிக்கவில்லை என்பதை வெளிப்படுத்துகிறது.

மட்டுமின்றி, ஜப்பானும் சீனாவின் எழுச்சிக்கு அச்சுறுத்தலாக இருக்கக்கூடிய இராணுவ இலக்குகளைக் கொண்டுள்ளது. இதனாலையே, முதல் முறையாக, ஒரு ஜப்பானிய தலைவர் தைவானில் ஆயுதமேந்திய தலையீட்டிற்கான லட்சியங்களை வெளிப்படுத்தியுள்ளார் மற்றும் சீனாவிற்கு எதிராக இராணுவ அச்சுறுத்தலை விடுத்துள்ளார் என சீன நாளேடு ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
நான்ஜிங் படுகொலை
இதுவரை ஜப்பான் பிரதமர்கள் எவரும் தைவான் விவகாரத்தில் இராணுவ நடவடிக்கை குறித்து கருத்தேதும் தெரிவிக்காத நிலையில், தகைச்சி முதல் முறையாக நாட்டின் பாதுகாப்பு தொடர்பில் தைவானை இணைத்துள்ளார்.
தகைச்சி பொறுப்புக்கு வந்த சில நாட்களிலேயே, அமெரிக்காவுடன் நெருக்கமான பாதுகாப்பு உறவுகளுக்கு அழைப்பு விடுத்த அவர், நாட்டின் பாதுகாப்பு கட்டமைப்பை விரைவுபடுத்த நடவடிக்கை எடுத்து வருகிறார்.

இது சீனாவிற்கு கடும் சவாலை ஏற்படுத்தியுள்ளதாகவே கூறப்படுகிறது. சீன படையெடுப்பின் போது ஜப்பானிய இராணுவம் 200,000 க்கும் மேற்பட்ட நிராயுதபாணியான பொதுமக்களைக் கொன்றது.
நான்ஜிங் படுகொலை என்று அழைக்கப்படும் இந்த சம்பவத்தில், பல்லாயிரக்கணக்கான பெண்கள் மற்றும் சிறுமிகளை பாலியல் துஸ்பிரயோகம் செய்து சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டனர்.
20 ஆம் நூற்றாண்டின் மிகவும் கொடூரமான போர்க்கால அட்டூழியங்களில் ஒன்று இதுவென்றே கூறப்படுகிறது. ஆனால், ஜப்பான் தனது போர்க்கால அட்டூழியங்களுக்கு பலமுறை மன்னிப்பு கேட்டு வருத்தமும் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |