உலகின் நம்பர் 1 கோடீஸ்வரர் பட்டத்தை இழந்தார் எலான் மஸ்க்! அந்த இடம் யாருக்கு?
போர்ப்ஸ் வெளியிட்டுள்ள தகவலின்படி உலகின் நம்பர் 1 கோடீஸ்வரர் என்ற இடத்தை எலான் மஸ்க் இழந்துள்ளார்.
பெர்னார்ட் அர்னால்ட்
தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வந்த எலான் மஸ்க் தற்போது இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். அதன்படி முதலிடத்தை பெர்னார்ட் அர்னால்ட் பிடித்துள்ளார்.
போர்ப்ஸ் பட்டியலில் பெர்னார்ட் அர்னால்ட் சொத்து மதிப்பு $188.6 பில்லியன் எனவும், எலான் மஸ்க் சொத்து மதிப்பு $176.8 பில்லியன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Getty images
புளூம்பெர்க் பில்லியனர்ஸ் இண்டெக்ஸ்
அதே போல புளூம்பெர்க் பில்லியனர்ஸ் இண்டெக்ஸ் வெளியிட்டுள்ள பட்டியலில் பெர்னார்ட் அர்னால்ட் சொத்து மதிப்பு $171 பில்லியன் என கூறப்பட்டுள்ளது.
எலான் மஸ்க் சொத்து மதிப்பு $164 பில்லியன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எலான் மஸ்க், ஒரு காலத்தில் $340 பில்லியன் சொத்து மதிப்புடன் உச்சத்தில் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.