ரூ.28 ஆயிரத்தில் அறிமுகமாகும் Realme 14 Pro 5G சீரிஸ்
சீன தொழில்நுட்ப நிறுவனமான Realme நாளை அதாவது ஜனவரி 16-ஆம் திகதி பட்ஜெட் பிரிவில் Realme 14 Pro 5G எனும் புதிய ஸ்மார்ட்போன் தொடரை அறிமுகப்படுத்த உள்ளது.
நிறுவனம் இந்த சீரிஸில் Realme 14 Pro மற்றும் Realme 14 Pro+ ஆகிய இரண்டு ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்துகிறது.
Realme நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ வலைத்தளம் மற்றும் சமூக ஊடக பக்கங்களில் ஸ்மார்ட்போன்களின் டீஸரை வெளியிட்டு, வெளியீடு குறித்த தகவல்களை வழங்கியுள்ளது.
வரவிருக்கும் இந்த ஸ்மார்ட்போன் தொடரில், 3 flash கொண்ட 50 மெகாபிக்சல் பிரதான camera-வைக் காணலாம்.
50 மெகாபிக்சல் Sony LYT-701 மற்றும் 50 மெகாபிக்சல் Sony telephoto camera லென்ஸ் காணப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஸ்மார்ட்போன் Android 15-இல் வேலை செய்யும் Snapdragon 3s Gen 15 சிப்செட்டைப் பெறும் என்பதை நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.
இது தவிர, பவர் பேக்கப்பிற்காக ரியல்மி 14 ப்ரோ தொடரில் 6000mAh battery கிடைக்கும். இந்த ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலை ரூ.28,000 ஆக இருக்கலாம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Realme 14 Pro Series, Realme14 Pro, Realme 14 Pro+