ரூ.40,999 ஆரம்ப விலையில் Realme அறிமுகப்படுத்தியுள்ள புதிய ஸ்மார்ட்போன்
தொழில்நுட்ப நிறுவனமான Realme இன்று (ஜூன் 20) Realme GT 6 ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த ஸ்மார்ட்போனில் Qualcomm Snapdragon 8s Gen 3 Processor, AI Night Vision Mode, AI Smart Loop மற்றும் AI Smart Removal உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன.
Realme-இன் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட தொலைபேசி 6,000 nits brightness மற்றும் 120Hz refresh rate-உடன் 6.78-inch display கொண்டுள்ளது. இது உலகின் பிரகாசமான display என்று நிறுவனம் கூறுகிறது.
Realme GT6 மூன்று வகையான storage விருப்பங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் ஆரம்ப விலை ரூ. 40,999.
Realme நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு இந்த ஸ்மார்ட்போனில் பல சலுகைகளை வழங்கியுள்ளது.
நிறுவனத்தின் இணையதளத்தின்படி, Realme GT6 முன்பதிவு செய்யும் போது, ரூ.4000 Bank Offer, 6 மாத dispaly damage protection மற்றும் ரூ.1000 எக்ஸ்சேஞ்ச் போனஸ் ஆகியவற்றை வழங்குகிறது.
ஸ்மார்ட்போனின் முன்பதிவும் தொடங்கியுள்ளது. இதை வாங்குவோர் ஜூன் 24 வரை முன்பதிவு செய்யலாம்.
இது தவிர, ஒரே நேரத்தில் பணம் செலுத்தி உங்களால் வாங்க முடியாவிட்டால், 12 மாதங்கள் வரை No cost EMI என்ற விருப்பத்தையும் நிறுவனம் வழங்குகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Realme GT 6, Realme GT 6 Smartphone, Realme Smartphones, Realme GT 6 price, Tech News in Tamil