உலகக்கோப்பை அரையிறுதிப்போட்டிக்கு சேப்பாக்கம் தெரிவு செய்யப்படாதது ஏன்? வெளியான காரணம்
ஒருநாள் உலகக்கோப்பையின் அரையிறுதிப் போட்டிக்கு சென்னை சேப்பாக்கம் தெரிவு செய்யப்படாதது ஏன் என்பது குறித்த காரணம் வெளியாகியுள்ளது.
ஒருநாள் உலகக்கோப்பை தொடர்
இந்தியாவில் வருகிற அக்டோபர் மாதம் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்குகிறது. இந்திய அணி விளையாடும் முதல் போட்டி 8ஆம் திகதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது.
அதே சமயம் அகமதாபாத் மைதானத்தில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி 15ஆம் திகதி நடைபெற உள்ளது. அரை இறுதிப்போட்டிகள் மும்பை மற்றும் கொல்கத்தாவிலும், இறுதிப்போட்டி அகமதாபாத் மைதானத்திலும் நடைபெற உள்ளது.
ICC
சேப்பாக்கம் மைதானம்
இந்நிலையில் சென்னை சேப்பாக்கம் மைதானம் அரை இறுதிப்போட்டிக்கு ஏன் தெரிவு செய்யப்படவில்லை என்பதற்கான காரணம் தற்போது தெரிய வந்துள்ளது.
இதுதொடர்பாக மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், 'அக்டோபர் 20ஆம் திகதிக்குப் பிறகு பருவமழை பெய்யும். மேலும் நவம்பரில் புயல் மற்றும் சூறாவளிகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. அதனால் தான் எங்கள் போட்டிகள் அனைத்தும் முன்னதாகவே திட்டமிடப்பட்டுள்ளன' என தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |