ஸ்கொட்லாந்தை வதம் செய்த இலங்கை அணி! உலகக்கோப்பை தகுதிச்சுற்றில் தொடர்ச்சியாக 4வது வெற்றி
உலகக்கோப்பை தகுதிச்சுற்றில் இலங்கை அணி 82 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஸ்கொட்லாந்தை வீழ்த்தியது.
நிசங்கா அசத்தலான ஆட்டம்
புலவாயோவில் நடந்த இந்தப் போட்டியில் இலங்கை அணி முதலில் துடுப்பாடியது. திமுத் கருணாரத்னே (7), குசால் மெண்டிஸ் (1) ஆகியோரை சோலே அடுத்தடுத்து வெளியேற்றினார்.
அடுத்து வந்த சமரவிக்ரமா 26 ஓட்டங்களில் எவன்ஸ் பந்துவீச்சில் வீழ்ந்தார். அதன் பின்னர் அசலங்கா, நிசங்கா கூட்டணி இலங்கையின் ஸ்கோரை உயர்த்தியது.
அணியின் ஸ்கோர் 142 ஆக இருந்தபோது நிசங்கா 75 (85) ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த வீரர்களும் விக்கெட்டுகளை இழந்த வண்ணம் இருந்தனர்.
? Top knock by Pathum Nissanka ?#SLvSCO #LionsRoar pic.twitter.com/cZuxAbCtjo
— Sri Lanka Cricket ?? (@OfficialSLC) June 27, 2023
அசலங்கா அரைசதம்
எனினும், அரைசதம் கடந்த அசலங்கா 65 பந்துகளில் 2 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 63 ஓட்டங்கள் விளாசினார். இறுதியில் இலங்கை அணி 49.3 ஓவர்களில் 245 ஓட்டங்களுக்கு ஆல்-அவுட் ஆனது. ஸ்கொட்லாந்து தரப்பில் கிரேவ்ஸ் 4 விக்கெட்டுகளும், மார்க் வாட் 3 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
அதனைத் தொடர்ந்து ஆடிய ஸ்கொட்லாந்து அணி ஓட்டங்கள் எடுக்க தடுமாறியது. தீக்ஷணா மற்றும் ஹசரங்காவின் சுழலில் சிக்கி அந்த அணி 163 ஓட்டங்களில் சுருண்டது.
?A fighting knock by Charith Asalanka ?#SLvSCO #CWC23 #LionsRoar pic.twitter.com/bDQZu1Uhan
— Sri Lanka Cricket ?? (@OfficialSLC) June 27, 2023
கிரேவ்ஸ் அபார ஆட்டம்
அதிகபட்சமாக கிரேவ்ஸ் ஆட்டமிழக்காமல் 56 ஓட்டங்கள் எடுத்தார். தீக்ஷணா 3 விக்கெட்டுகளும், ஹசரங்கா 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
இலங்கை அணி 82 ஓட்டங்கள் வித்தியாசத்தில் நான்காவது வெற்றியை சுவைத்தது. அடுத்ததாக சூப்பர் சிக்ஸ் சுற்றில் நெதர்லாந்து அணியை 30ஆம் திகதி இலங்கை எதிர்கொள்கிறது.
?? Sri Lanka dominates the #CWC23 qualifier 1st round with 4️⃣ wins out of 4️⃣ games! ? We're headed to the super six stage with 4️⃣ points! ? #LionsRoar #SLvSCO pic.twitter.com/4b18StSKtb
— Sri Lanka Cricket ?? (@OfficialSLC) June 27, 2023
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |