அயர்லாந்தை தவிடுபொடியாக்கிய இலங்கை அணி! ஹசரங்காவின் மிரட்டலில் ஹாட்ரிக் வெற்றி
அயர்லாந்துக்கு எதிரான போட்டியில் இலங்கை அணி 133 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஹாட்ரிக் வெற்றியை பெற்றது.
இலங்கை 325 ஓட்டங்கள்
உலகக்கோப்பை தகுதிச்சுற்றின் இன்றைய போட்டியில் அயர்லாந்து அணியை இலங்கை எதிர்கொண்டது. முதலில் ஆடிய இலங்கை அணி 49.5 ஓவரில் 325 ஓட்டங்கள் குவித்து ஆல்அவுட் ஆனது.
திமுத் கருணரத்னே 103 ஓட்டங்களும், சமரவிக்ரமா 82 ஓட்டங்களும் எடுத்தனர். அயர்லாந்து தரப்பில் மார்க் அடைர் 4 விக்கெட்டுகளும், பேரி மெக்கர்த்தி 3 விக்கெட்டுகளும், டெலனி 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
Sri Lanka sets a target of 326 for Ireland! ???#SLvIRE #LionsRoar #CWC23 pic.twitter.com/nfK8uiPRsL
— Sri Lanka Cricket ?? (@OfficialSLC) June 25, 2023
சுருண்ட அயர்லாந்து
பின்னர் களமிறங்கிய அயர்லாந்து அணி, ஹசரங்காவின் பந்துவீச்சுக்கு இரையானது. கேம்பர் 39 ஓட்டங்களும், டெக்டர் 33 ஓட்டங்களும் எடுக்க, ஏனைய வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் வெளியேறினர்.
Twitter (OfficialSLC)
இதனால் அயர்லாந்து அணி 192 ஓட்டங்களுக்கு சுருண்டது. டாக்ரெல் 26 ஓட்டங்களுடன் களத்தில் இருந்தார். ஹசரங்கா இந்தப் போட்டியிலும் 5 விக்கெட் வீழ்த்தினார்.
இதன்மூலம் இலங்கை அணி ஹாட்ரிக் வெற்றி பெற்று ஏறக்குறைய தகுதி பெற்று விட்டது.
Twitter (OfficialSLC)
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |