தாம்பரத்தில் சரக்கு ரயில் தடம் புரண்டதற்கு பின்னால் இருக்கும் காரணம்
தாம்பரத்தில் நேற்று சரக்கு ரயில் தடம் புரண்டதற்கான காரணம் தற்போது தெரியவந்துள்ளது.
தடம் புரண்ட ரயில்
அரக்கோணத்தில் இருந்து கார்களை ஏற்றி செல்லும் சரக்கு ரயில் ஒன்று 3 வாரங்களுக்கு முன்பு பராமரிப்பு பணிக்காக தாம்பரம் யார்டு பகுதிக்கு கொண்டு வரப்பட்டது.
இதற்கான பராமரிப்பு பணி முடிந்த நிலையில் அரக்கோணம் செல்வதற்காக நேற்று இரவு 7.00 மணிக்கு எக்ஸ்பிரஸ் ரயில்கள் செல்லும் மெயின்லைனுக்கு அனுப்பப்பட்டது.
இதில், 26 பெட்டிகள் கொண்ட அந்த ரயிலின் 5 பெட்டிகள் மெயின் லைனுக்குள் வந்தது. அந்த நேரத்தில் இடையில் இருந்த 3 பெட்டிகள் தடம் புரண்டன.
இந்த சம்பவத்தை அறிந்த ரயில்வே துறை அதிகாரிகள் விரைந்து சென்று தடம் புரண்ட பெட்டியை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
ரயில் தடம் புரண்டதற்குக் ‘வீல் அலைன்மென்ட்’ சரியாக இல்லாததே காரணம் என்று சொல்லப்படுகிறது.
இதனால் எழும்பூரில் இருந்து கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் 10 நிமிடம் தாமதமாக புறப்பட்டு சென்றது. மேலும், மின்சார ரயில்களும் திருப்பி விடப்பட்டன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |