மின்தடையால் முடங்கிய பிரான்ஸ் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் - என்ன காரணம்?
மின்தடையால் பிரான்ஸ் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் அத்தியாவசிய சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஐரோப்பிய நாடுகளில் மின்தடை
பிரான்ஸ், போர்ச்சுக்கல், இத்தாலி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் இதுவரை இல்லாத அளவில் மின்தடை ஏற்பட்டுள்ளதால், அத்தியாவசிய சேவைகள் பாதிக்கப்பட்டு லட்சக்கணக்கான மக்கள் அவதிப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
உள்ளூர் நேரப்படி, மதியம் 12:30 மணிக்கு ஏற்பட்ட மின்தடை, தற்போது வரை சீராகவில்லை என கூறப்படுகிறது.
⚡ MASSIVE BLACKOUT IN EUROPE
— NEXTA (@nexta_tv) April 28, 2025
Residents in Spain, Portugal, France, and Belgium report major outages.
Airports and subways shut down, communication networks hit.
Madrid's Barajas Airport is out of service, El Mundo reports.
No official cause confirmed yet. Chaos unfolds. pic.twitter.com/vZyJOjhEwj
இந்த மின்தடையால், அங்குள்ள சில விமான நிலையங்களில் தற்காலிகமாக சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அத்தியாவசிய சேவைகள் பாதிப்பு
மேலும், ஸ்பெயின் தலைநர் மாட்ரிட் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் சாலைகளில் உள்ள சிக்னல்கள் செயல் இழந்து, கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
பார்சிலோனாவில் மெட்ரோ ரயில் சேவைகள் முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சுரங்கப் பாதைக்குள் சிக்கியிருக்கும் ரயில்களில் இருக்கும் பயணிகளை மீட்கும் பணியில் ரயில்வே அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
செல்போன் டவர்கள் செயல்படாததால், செல்போனிலிருந்து அழைப்புகளை மேற்கொள்ள முடியாமலும், டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகள் மேற்கொள்ள முடியாமலும் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.
இந்த மின் தடை காரணமாக மாட்ரிட் ஓபன் டென்னிஸ் ஆட்டம் நிறுத்தப்பட்டுள்ளது. தற்போது பெல்ஜியத்திலும் மின்தடை ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மின்தடைக்கான காரணம் தற்போது வரை தெரியாத நிலையில், மின்சார விநியோகத்தை மீட்டெடுக்கும் முயற்சியில் உள்ளதாக, ஸ்பெயினுக்கு மின் விநியோக சேவை அளிக்கும் ரெட் எலக்ட்ரிக்கா நிறுவனம் தெரிவித்துள்ளது.
என்ன காரணம்?
பிரான்சின் தென்மேற்கில் உள்ள அலரிக் மலையில் ஏற்பட்ட தீ விபத்தில், பெர்பிக்னான் மற்றும் கிழக்கு நார்போன் இடையே உயர் மின்னழுத்த மின் இணைப்பு சேதமடைந்ததும் ஒரு சாத்தியமான காரணமாக அடையாளம் காணப்படுகிறது.
அதேவேளையில், இதன் பின்னணியில் ஒருங்கிணைக்கப்பட்ட சைபர் தாக்குதல் இருக்கலாம் என்ற சந்தேகமும் நிலவி வருகிறது.
மின்தடைக்கான காரணம் தற்போது வரை உறுதியாக தெரியாத நிலையில், மின்சார விநியோகத்தை மீட்டெடுக்கும் முயற்சியில் உள்ளதாக, ஸ்பெயினுக்கு மின் விநியோக சேவை அளிக்கும் ரெட் எலக்ட்ரிக்கா நிறுவனம் தெரிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |