விமானங்கள் ஏன் வெள்ளை நிறத்தில் உள்ளன? பின்னனியில் உள்ள காரணங்கள்
reason for flights in white color: பெரும்பாலான விமானங்கள் வெள்ளை நிறத்தில் உள்ளதன் பின்னணியில் உள்ள காரணங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.
விமானங்கள் ஏன் வெள்ளை நிறத்தில் உள்ளது?
பொதுவாக பெரும்பாலான விமானங்களின் அளவு மற்றும் நிறுவனத்தின் லோகோ வேறு வேறாக இருந்தாலும், பெரும்பாலானவை வெள்ளை நிறத்திலே இருக்கும்.

விமான நிறுவனங்கள் வெள்ளை நிறத்தை பயன்படுத்துவதற்கு பின்னணியில் பல்வேறு காரணங்கள் உள்ளது.
வெள்ளை நிறம் சூரிய ஒளியை பிரதிபலிக்கும் தன்மையை கொண்டது. இதனால் விமானத்தின் மேற்பரப்பில் அதிக வெப்பம் உறிஞ்சப்படாமல் இருக்கிறது.
இதனால் விமானம் சூடாகாமல் தவிர்ப்பதோடு, குளிரூட்டும் அமைப்புக்கு அதிக சுமை ஏற்படாது.
விமானம் வெள்ளை நிறத்தில் இருப்பதால் வெளிப்புறத்தில் ஏற்படும் சிறிய சேதங்கள், விரிசல்களை கூட பாதுகாப்பு சோதனையின் போது பராமரிப்பு குழுவினர் எளிதாக கண்டறிய முடியும்.

சூரிய ஒளியில் வெள்ளை நிறம் மற்ற நிறங்களை விட குறைவாகவே மங்குவதால், விமானத்திற்கு மீண்டும் மீண்டும் வண்ணம் பூசப்பட வேண்டிய நிலை ஏற்படாது.
ஆனால் எல்லா விமானங்களும் வெள்ளை நிறத்தில் இருப்பதில்லை. அரிதாக ஒரு சில விமானங்கள் கருப்பு, நீலம், தங்க நிறங்களில் உள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |