முகேஷ் அம்பானிக்கு கோடிக்கணக்கில் வந்த லாபம்: ஒரு ரூபாய் கூட ஊதியம் இல்லை..ஏன்?
கோடிக்கணக்கில் லாபம் வந்தாலும் முகேஷ் அம்பானி ஒரு ரூபாய் கூட ஊதியம் பெறாதது குறித்து பார்ப்போம்.
ஒரு ரூபாய் கூட ஊதியம் இல்லை
2025-26 நிதியாண்டில் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.95,754 கோடியாக உயர்ந்துள்ளது.

இதன்மூலம் நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.18,19,103 கோடியைத் தொட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஆனால், தலைவரான முகேஷ் அம்பானிக்கு இதில் ஒரு ரூபாய் கூட ஊதியம் இல்லை.
ஏனெனில், 2020ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் முகேஷ் அம்பானி தனது சம்பளத்தையும் முழுவதுமாக ஏற்க மறுத்துவிட்டார்.
கொரோனா நெருக்கடி காலத்தில் அவர் இந்த முடிவை எடுத்ததாக கூறப்பட்டது. அதற்கு முன்பு 2009 நிதியாண்டு முதல் 12 ஆண்டுகளாக எவ்விதமான மாற்றமும் இன்றி ரூ.15 கோடியாக முகேஷ் அம்பானி பெற்று வந்தார்.
ஆனால், தற்போது அவர் எடுத்த முடிவின் அடிப்படையில் வந்த பாரிய லாபத்தில் தனக்கான ஊதியம், கொடுப்பனவு, பிற சலுகைகள், ஓய்வூதியப் பலன்கள், பங்கு விருப்பங்கள் எதையும் பெறவில்லை என்று தெரிய வந்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |