கொரோனா பாதிப்பு அதிகரித்ததற்கு இது தான் காரணமா? வெளியான புதிய தகவல்
அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் திடீரென கொரோனா அதிகரிப்பதற்கு Delmicron வகையே காரணம் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை கடந்த சில நாட்களாக வேகமாக அதிகரித்து வருவதால் பல அமெரிக்க மாநிலங்களும் ஐரோப்பிய நாடுகளும் கோவிட் தொடர்பான கட்டுப்பாடுகளை மீண்டும் அறிமுகப்படுத்த உள்ளன.
புதிதாக கண்டறியப்பட்ட Omicron மாறுபாடு காரணமாக இந்த பாதிப்பு ஏற்பட்டது என்று பல ஆதாரங்கள் கூறப்படுகிறது.
ஆனால் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் கோவிட் பாதிப்பு அதிகரிப்பதற்கு Delmicron வகையே காரணம் என்று நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார். Delmicron என்பது டெல்டா மற்றும் Omicron வகைகளின் கலப்பினம் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
மஹாராஷ்டிராவின் கோவிட்-19 பணிக் குழுவின் உறுப்பினரான Dr Shashank R Joshi ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் Delmicron அல்லது டெல்டா மற்றும் ஓமிக்ரானின் இரட்டை பாதிப்பு சிறிதளவு ஏற்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.
எனினும் இந்த Delmicron மாறுபாடு குறித்து உலக சுகாதார அமைப்பு இன்னும் கருத்து தெரிவிக்கவில்லை.
இந்தியாவில் கோவிட்-19க்கான தேசிய பணிக்குழுவோ அல்லது இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலோ (ICMR) Delmicron என்ற வார்த்தையை பயன்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.