இந்தியாவில் கல்வி கட்டணம் உயர என்ன காரணம்? தொழிலதிபர் ஸ்ரீதர் வேம்பு கூறும் விளக்கம்
இந்தியாவில் கடந்த 30 ஆண்டுகளில் கல்வி கட்டணம் உயர்ந்துள்ள நிலையில் பெரிய விவாதமே நடந்து கொண்டு வருகிறது.
வைரலான பதிவு
ஐதராபாத்தில் உள்ள பள்ளி ஒன்றில் எல்.கே.ஜி படிப்பதற்கான கல்வி கட்டணம் ரூ.2.3 லட்சத்தில் இருந்து ரூ.3.7 லட்சமாக அதிகரித்துள்ளது என்று பெங்களூரைச் சேர்ந்த தொழிலதிபர் அவிரால் பாட் என்பவர் தந்து ட்விட்டர் எக்ஸ் தளத்தில் கூறியுள்ளார்.
மேலும் அவர் தனது பதிவில், "கடந்த 30 ஆண்டுகளில் பள்ளிக் கட்டணம் 9 மடங்கும், கல்லூரிக் கட்டணம் 20 மடங்கும் அதிகரித்துள்ளது.
நாம் வீட்டு விலையில் கவனம் செலுத்தும் போது, உண்மையான பணவீக்கம் கல்வியில் ஏற்பட்டுள்ளது. கல்வி என்பது மலிவு விலையில் இல்லை" என்று கூறியுள்ளார்.
ஸ்ரீதர் வேம்பு பதில்
இவரின் கருத்துக்கு தமிழகத்தைச் சேர்ந்த தொழிலதிபரும், சோஹோ Zoho நிறுவனதின் சிஇஓ -ஆன ஸ்ரீதர் வேம்பு பதில் அளித்துள்ளார்.
அவர் தனது ட்விட்டர் எக்ஸ் தளத்தில், " நகர்ப்புற ரியல் எஸ்டேட் மிகவும் விலை உயர்ந்ததாக இருப்பதால் கல்வி கட்டுபடியாகாத அளவு ஆகிவிட்டது. இதனால், கல்வி கட்டணமும் உயர்ந்துள்ளது.
இது கல்வி, சுகாதாரம், வீடு மற்றும் சில்லறை வணிகத்தையும் பாதிக்கிறது. அரசியலில் இருந்து ஏராளமான ஊழல் பணம் ரியல் எஸ்டேட்டில் குவிக்கப்படுகிறது.
இதுவே பணவீக்கத்தை அதிகரித்து மார்க்கெட் விலையை எகிறச்செய்துள்ளது. ஒருவகையில் நாம் அனைவரும் ஊழலுக்கு பணம் செலுத்துகிறோம்" என்று தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |