ரயில் தண்டவாளத்தில் ஜல்லி கற்கள் இருப்பது ஏன்? பின்னணியில் உள்ள காரணங்கள்
reason for stones in railway track: ரயில் தண்டவாளத்தில் ஏன் ஜல்லி கற்கள் இருக்கிறது என்பதன் பின்னணியில் உள்ள காரணங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
ரயில் தண்டவாளத்தில் ஜல்லி கற்கள் இருப்பது ஏன்?
ரயில் தண்டவாளத்தை கடக்கும் போது அதன் இடையே மற்றும் வெளியே ஜல்லி கற்கள் இருப்பதை கவனித்திருப்பீர்கள்.

இந்த கற்கள் வெறும் பள்ளங்களை நிரப்புவதற்காகவோ அல்லது அலங்காரத்திற்காகவோ போடப்படவில்லை. மாறாக இதுவே ரயில் இயங்குவதற்கு முக்கிய காரணமாக உள்ளது.
தண்டவாளத்தில் கொட்டப்பட்டுள்ள இந்த ஜல்லி கற்கள்(Ballast) என்று அழைக்கப்படுகிறது.
இந்த கற்கள் இல்லாமல் இருந்தால் ஆயிரக்கணக்கான டன் எடை கொண்ட ரயில் தண்டவாளத்தில் செல்லும் போது, தண்டவாளம் பூமிக்குள் புதைந்து விடும்.
இந்த கற்கள், ரயில் எடையை தாங்கி அதனை மற்ற கற்களுக்கும் அந்த எடையை பரப்பி ரயில் இயங்க உதவுகிறது. மேலும் இந்த கற்கள் ரயிலின் அதிர்வை உறிஞ்சி, தண்டவாளம் விலகி செல்வதை தடுக்கிறது.

இதே போல் மழைக்காலங்களில் தண்டவாளங்களில் நீர் தேங்குவதை தடுக்க இந்த கற்கள் உதவுகிறது. கற்களுக்கு இடையேயான சிறிய இடைவெளி மூலம், மழைநீர் எளிதாக வடிகிறது.
இந்த கற்கள், தண்டவாளத்தைச் சேதப்படுத்தக்கூடிய புற்களோ செடிகளோ வளராமல் தடுக்க உதவுகிறது. சுமார் 12 முதல் 16 இன்ச் அளவுள்ள சீரற்ற வடிவத்தில் உள்ள கற்கள் பயன்படுத்தப்படுகிறது.
கற்கள் காலப்போக்கில் தேய்ந்து, உடையக்கூடியதாக மாறி தாங்குதிறனை இழக்கும். இதனால் பராமரிப்பின் போது, பழைய கற்கள் சுத்தம் செய்யப்பட்டு புதிய கற்கள் பதிக்கப்படுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |