சதமடித்த பின் செயினை முத்தமிடும் கோலி - பின்னணியில் உள்ள காதல்
விராட் கோலி சதமடித்த பின்னர் செயினை முத்தமிடுவதன் பின்னணியில் உள்ள காரணம் குறித்து இந்த பதிவில் காணலாம்.
சதமடித்தால் செயினை முத்தமிடும் கோலி
ராய்ப்பூரில் நடைபெற்ற தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான 2 வது ஒருநாள் போட்டியில் விராட் கோலி, தனது 53வது ஒருநாள் சதத்தை பதிவு செய்தார்.

11வது முறையாக தொடர்ச்சியாக 2 ஒருநாள் போட்டிகளில் சதமடித்த கோலி, தனது கழுத்தில் அணிந்திருந்த செயினில் உள்ள லாக்கெட்டை முத்தமிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

கோலி கடந்த சில ஆண்டுகளாக ஒவ்வொரு முறை சதமடிக்கும் போதும், இவ்வாறு செயினில் உள்ள லாக்கெட்டை முத்தமிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

இதன் பின்னணியில் அவரது காதல் மனைவி அனுஷ்கா சர்மா மீதான காதல் உள்ளதாக கூறப்படுகிறது.
திருமண மோதிரம்
கடந்த 2017 ஆம் ஆண்டு, விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா திருமணம் இத்தாலியில் நடைபெற்றது.

இந்த திருமணத்தின் போது அனுஷ்கா சர்மா விராட் கோலிக்கு அணிவித்த மோதிரத்தை கோலி தனது செயினில் மாட்டியுள்ளார்.
ஒவ்வொரு முறை சதமடிக்கும் போது, அந்த மோதிரத்தை முத்தமிட்டு சதத்தை தனது காதல் மனைவிக்கு அர்ப்பணிக்கிறார்.

முதல்முறையாக, 2018 ஆம் ஆண்டு செஞ்சூரியனில் நடந்த தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சதம் அடித்த பின் இவ்வாறு கொண்டாட தொடங்கினார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |