Twitter -யை விட Instagram பயன்படுத்த இது தான் காரணம்! வெளிப்படையாக பேசிய தோனி
சமூக வலைதளங்கள் குறித்து சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி கருத்து தெரிவித்துள்ளார்.
கடந்த 18 -ம் திகதி நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்க்ஸ் மற்றும் பெங்களூரு அணிகளுக்கு இடையிலான போட்டியில், பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை சிஎஸ்கே அணி இழந்திருக்கிறது.
இது ஒருபுறம் இருந்தால் ஐபிஎல் போட்டியில் தோனியின் ஓய்வு குறித்த பேச்சுக்களும் எழுந்த வண்ணம் இருக்கிறது.
தோனி பேசியது
இந்நிலையில் யூடியூப் சேனல் ஒன்றிற்கு தோனி பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கிரிக்கெட் விளையாடுவதற்கு தான் எதிர்கொண்டு வரும் சவால்கள் குறித்து பேசுகையில், "நான் வருடம் முழுவதும் கிரிக்கெட் விளையாடுவது இல்லை.
இதனால் நான் எப்போதும் பிட்னெஸ் ஆக இருக்க வேண்டும். ஏனென்றால் நான் இளம் வீரர்களுடன் போட்டியிடும் சூழல் உள்ளது. வயதை பார்த்து யாரும் டிஸ்கவுண்ட் தர மாட்டார்கள்.
நாம் விளையாட வேண்டுமென்றால் நாம் தான் பிட்னெஸ் ஆக இருக்க வேண்டும். அதில் உணவு பழக்கமும் அடங்கியுள்ளன" என்றார்.
அடுத்ததாக சமூக வலைதளங்கள் குறித்து பேசுகையில், "Twitter -யை விட Instagram பயன்படுத்தவே நான் விரும்புவேன். Twitter தளத்தில் எந்தவொரு நல்ல விடயமும் நடந்ததில்லை.
இந்தியாவை பொறுத்தவரை எதாவது ட்விட்டரில் பதிவிட்டால் அதனை பல வகையில் திரித்து சர்ச்சை ஆக்கிவிடுவார்கள்.
எனக்கு Instagram பிடித்திருக்கிறது. அதனை அவ்வப்போது பயன்படுத்தி வீடியோக்களை பதிவிட்டு, நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்பதை ரசிகர்களுக்கு வெளிப்படுத்துவேன்" என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |