பிரபாகரன் படங்களை பயன்படுத்தாதற்கு இது தான் காரணம்! சீமான் விளக்கம்

India Seeman Politics Election 2021 Prabhakaran
By Balakumar Mar 10, 2021 09:37 AM GMT
Report

பிரபாகரன் படங்களை நாம் தமிழர் கட்சி பயன்படுத்தாதற்கு என்ன காரணம் என்பது குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விளக்கமளித்துள்ளார்.

தமிழகத்தில் ஏப்ரல் 6ம் திகதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது முதல் மாநிலத்தில் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது.

கூட்டணி, தொகுதி பங்கீடு, வேட்பாளர்கள் அறிவிப்பு, வேட்பு மனு தாக்கல் என அரசியல் கட்சிகள் பரபரப்பாக செயல்பட்டு வருகின்றனர்.

இதனிடையே, மார்ச் 7ம் திகதி சென்னையில் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான நாம் தமிழர் கட்சியின் 234 வேட்பாளர்களையும் ஒரே மேடையில் அறிமுகப்படுத்தும் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அந்த பொதுக்கூட்டம் மேடையில் வைக்கப்பட்டிருந்த பதாகையில் பிரபாகரன் படம் இடம்பெறாதது விமர்சனத்துக்குள்ளானது.

அதேபோல், நாம் தமிழர் கட்சியின் சமூக வலைதள பக்கங்களிலும் பிரபாகரன் படங்கள் பயன்படுத்துவது தவிர்க்கப்பட்டது. இந்நிலையில் தனியார் தொலைக்கட்சி நேர்காணில் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பிரபாகரன் படங்கள் இடம்பெறாதது குறித்து விளக்கமளித்துள்ளார்.

என்னுடைய கடவுச்சீட்டு இல்லை, என்னால் எந்த நாட்டிற்கும் போக முடியாது. LTTE-ஐ சீமானை வைத்து தான் மீண்டும் கட்டமைக்கிறார்கள் என புகார் அளித்து என்னை முடித்துவிட்டார்கள்.

பிரபாகரனின் படங்களை யூடியூபில் போட்டால் அது முடக்கப்படுகிறது, வாட்ஸ்-அப், பேஸ்புக்கில் போட்டால் அந்த பக்கத்தை முடக்குகிறார்கள். இத்தனை நெருக்கடிகளை நான் எதிர்கொண்டு ஓடுகிறேன்.

மேடை பதாகையில் பிரபாகரனின் படங்களை வைத்திருந்தால் அதை தொலைக்காட்சியில் ஒளிபரப்பமாட்டார்கள். இவ்வளவு கடினமான சூழலில் தான் நான் ஓடிக்கொண்டிருக்கிறேன் என சீமான் விளக்கமளித்துள்ளார்.

மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, Toronto, Canada

23 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கோண்டாவில், East Ham, United Kingdom

19 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
மரண அறிவித்தல்

Urumpirai, மன்னார் முருங்கன், Markham, Canada, Drancy, France

21 Aug, 2026
மரண அறிவித்தல்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி

திருநெல்வேலி, கோண்டாவில், London, United Kingdom

19 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், பிரித்தானியா, United Kingdom

26 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி, கொழும்பு

26 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
33ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்காடு, வரணி

23 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US