தன் குடையைத் தானே பிடித்துக்கொள்ளும் பிரித்தானிய மகாராணியார்: இரகசியம் இதுதானாம்!
ராஜ குடும்பத்தினருக்கு உதவி செய்வதற்கு நூறுபேர் இருப்பார்கள்.
ஆனாலும், பிரித்தானிய மகாராணியார், தன் குடையை மட்டும் தானே பிடித்துக்கொண்டிருப்பதை பல புகைப்படங்களில் காணலாம்.
தன் குடையை தானே பிடித்துக்கொள்ள விரும்பும் மகாராணியார்
எழுத்தாளரும் தொலைக்காட்சி பிரபலமுமான Gyles Brandreth என்பவர் கூறும்போது, பலர் மகாராணியாரின் குடையைப் பிடித்துக்கொள்ள முன்வந்தபோதும், அவர் அதை மறுத்துவிடுவார் என்று கூறியுள்ளார்.
ஒருமுறை, அவர் ஆக்ஸ்போர்ட் யூனியன் தலைவராக இருந்த William Waldegrave என்பவரை, மழை பெய்தபோதும் அவர் மகாராணியாரின் குடையை வாங்கிக்கொள்ளவில்லை என்பதற்காக திட்டினாராம் Brandreth.
Image: Getty
தன் குடையை வேறு யாரிடமும் கொடுக்காததன் இரகசியம்
உடனே, Waldegrave, நான் மகாராணியாரிடம் குடையைக் கொடுக்குமாறு கேட்டேன். ஆனால், தன் குடையை எப்போதுமே தானே பிடித்துக்கொள்வதாக தெரிவித்த மகாராணியார், வேறு யாராவது தன் குடையைப் பிரித்துக்கொண்டால், குடையிலிருந்து வழியும் தண்ணீர் என் கழுத்தில் சொட்டு சொட்டாக வடியும். அதைத் தவிர்ப்பதற்காகத்தான் நானே என் குடையைப் பிடித்துக்கொள்கிறேன் என்று மகாராணியார் தன்னிடம் கூறியதாக தெரிவித்துள்ளார்.
Image: Getty
Image: Getty