2025-ல் கனடாவில் இருந்து அதிகமான இந்தியர்கள் வெளியேற்றம்
கனடா எல்லை பாதுகாப்பு சேவை (CBSA) வெளியிட்ட புதிய தரவுகளின்படி, 2025-ஆம் ஆண்டில் அதிக அளவில் இந்தியர்கள் வெளியயேற்றப்பட்டுள்ளனர்.
இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 41 சதவீதம் அதிகரித்துள்ளது.
ஜனவரி முதல் அக்டோபர் வரை 2,831 இந்தியர்கள் கனடாவில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். 2024-ஆம் ஆண்டில் இதே காலகட்டத்தில் 1,997 பேர் மட்டுமே வெளியேற்றப்பட்டிருந்தனர்.
2019-ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை வெறும் 625-ஆக இருந்தது. தற்போது, வெளியேற்றப்படும் நடைமுறையில் உள்ளவர்களில் இந்தியர்கள் 6,515 பேர் என அதிகமாக உள்ளனர்.

மொத்தத்தில், 2025-ஆம் ஆண்டில் 18,969 பேர் கனடாவில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். இதில் மெக்சிகோ குடிமக்கள் 3,972 பேர் என மிகப்பெரிய பகுதியைக் கொண்டுள்ளனர்.
CBSA தரவுகளின்படி, அதிகபட்ச வெளியேற்றப்பட்டவர்கள் அகதிகள் தொடர்பான விதிமுறைகளை மீறியவர்களே (15,605 பேர்). மேலும், 841 பேர் தேசிய பாதுகாப்பு, குற்றச்செயல்கள், மனித உரிமை மீறல்கள் போன்ற “கடுமையான தகுதி இழப்புகள்” காரணமாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.
கனடா அரசு, 2025 ஏப்ரல் மாதம் முதல் வெளியேற்றப்பட்டவர்கள் மீண்டும் நாட்டில் நுழைய விரும்பினால் செலுத்த வேண்டிய கட்டணத்தை பெரிதும் உயர்த்தியுள்ளது.
முன்பு சுமார் 1,500 கனடிய டொலராக இருந்த கட்டணம், தற்போது 12,800 டொலர் (escort removals) மற்றும் 3,800 டொலர் (unescorted removals) என உயர்த்தப்பட்டுள்ளது.
மேலும், CBSA உலகம் முழுவதும் உள்ள தன் அதிகாரிகள் மூலம் 5,889 பயணிகளை விமானத்தில் ஏற்ற அனுமதிக்காமல் தடுத்துள்ளது. சிலர் போலியான ஆவணங்களுடன் கனடாவுக்கு வர முயன்றதாக கூறப்படுகிறது.
இந்த தரவுகள், கனடா அரசு குடிவரவு விதிமுறைகளை கடுமையாக அமுல்படுத்தி வருவதை வெளிப்படுத்துகின்றன.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |