கொரோனா பாதிப்பை முதல் முறையாக உறுதி செய்த நாடு: அச்சத்தில் மக்கள்
டோங்கா நாட்டில் முதல் முறையாக ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது, மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
நியூசிலாந்தில் இருந்து பயணி ஒருவர் தீவு நாடான டோங்காவுக்கு சென்ற நிலையில், அவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
உலக நாடுகள் பலவற்றில் மக்கள் கொரோனா பரவல் காரணமாக அவதிப்பட்டு வரும் நிலையில், டோங்காவில் வெளிநாடுகளுக்கான விமான சேவைகள் முடக்கப்பட்டு, பயணிகள் எவரையும் அனுமதிக்காமல், கடுமையான கட்டுப்பாடுகளை விதித்திருந்தனர்.
ஆனால், தற்போது அண்டை நாடானா ஃபிஜிக்கு ஏற்பட்ட நிலை தங்களுக்கும் ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சத்தில் உள்ளனர் டோங்கா மக்கள். ஃபிஜி நாடும் கடுமையான கட்டுப்பாடுகளை அமுலுக்கு கொண்டுவந்து, கொரோனா பாதிப்புகள் ஏதும் இன்றி மக்களை பாதுகாத்து வந்தது.
ஆனால், கடந்த ஏப்ரல் மாதம் பயணி ஒருவரால் கொரோனா பாதிப்பு முதன்முறையாக உறுதி செய்யப்பட்டது. அதன் பின்னர், ஃபிஜியில் தற்போது 50,000 பேர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதுடன், சிகிச்சை பலனின்றி 700 பேர்கள் மரணமடையும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.
இந்த நிலையிலேயே தற்போது டோங்கா நாட்டில் கொரோனா பாதிப்பு முதன் முறையாக உறுதி செய்யப்பட்ட தகவல் வெளியாகியுள்ளது. நியூசிலாந்தில் இருந்து டோங்காவுக்கு திரும்பிய ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
குறித்த விமானத்தில் ஊழியர்கள் உட்பட 215 பேர்கள் பயணித்துள்ளனர். தற்போது கொரோனா அறிகுறிகள் தென்பட்ட நபர் ஹொட்டல் ஒன்றில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக டோங்கா பிரதமர் தெரிவித்துள்ளார்.
மேலும், உரிய ஆலோசனைகளுக்கு பின்னர் திங்கட்கிழமை முதல் கட்டுப்பாடுகள் இறுகும் என்றே கூறப்படுகிறது.