புற்றுநோயிலிருந்து மீண்டு.., முதல் முயற்சியிலேயே 720க்கு 715 மதிப்பெண்கள் எடுத்து நீட் தேர்வில் முதலிடம்
கொடிய நோயில் இருந்து தப்பித்து கடினமான தேர்வான நீட் தேர்வில் முதலிடம் பிடித்தவரை பற்றி பார்க்கலாம்.
யார் அவர்?
பள்ளி படிப்பை முடித்தவுடன் மாணவர்கள் மருத்துவராக வேண்டும் என்ற கனவுடன் ஒவ்வொரு ஆண்டும் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வை (NEET) எழுதுகிறார்கள்.
இந்த தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக மாணவர்கள் இரவும் பகலுமாக கடினமாக படித்து வெற்றி பெறுகின்றனர். மேலும், வெற்றி பெற முடியவில்லை என்றால் சில நேரங்களில் உயிரை மாய்த்துக் கொள்ளும் அளவுக்கு செல்கின்றனர்.
ஆனால், இங்கு ஒருவர் கொடிய நோயான புற்றுநோயிலிருந்து மீண்டு முதல் முயற்சியிலேயே நீட் தேர்வில் முதலிடம் பிடித்துள்ளார்.

31 வயதிலும் ஹர்திக் பாண்டியா ஃபிட்டாக இருப்பதற்கு என்ன காரணம்? அவர் தினமும் சாப்பிடும் உணவு இது தான்
இந்திய மாநிலமான மஹாராஷ்டிரா, மும்பையின் காட்கோபரைச் சேர்ந்தவர் மௌலிக் படேல் (Maulik Patel). இவர் 2019-ம் ஆண்டில் 11-ம் வகுப்பு படிக்கும்போதே நீட் தேர்வுக்கு தயாராக ஆரம்பித்தார். அதற்காக பயிற்சியில் சேர்ந்து படித்து வந்துள்ளார்.
இந்நிலையில் இவருக்கு , சிறுநீர் கழிக்கும் போது வலி, மலச்சிக்கல் மற்றும் காய்ச்சல் போன்ற தொந்தரவுகள் இருப்பது கண்டறியப்பட்டது. இது தான் அவரது வாழ்க்கையை புரட்டி போட்டது.
அதாவது இருக்கு 2022-ம் ஆண்டில் கார்சினோமா சர்கோமா (carcinoma sarcoma) இருப்பது கண்டறியப்பட்டது. இதற்காக அவர் 23 கீமோதெரபி சுழற்சிகள் (chemotherapy cycles) மற்றும் 31 கதிர்வீச்சு பின்னங்கள் (radiation fractions) போன்ற கடினமான வலியை அனுபவித்தார்.
இந்த துயரமான நேரத்திலும் வகுப்புகளுக்குச் சென்று மௌலிக் படித்து வந்தார். இவரது புற்றுநோய்க்கு சிகிச்சையளிக்க நகைகளை விற்று அவரது பெற்றோர் கொடுத்தனர்.
இதற்கு பலனாக மௌலிக் படேல் NEET UG 2024 தேர்வில் 720க்கு 715 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்தது மட்டுமல்லாமல் புற்றுநோயிலிருந்தும் விடுபட்டுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |