பொதுமக்கள் கஞ்சா பயிரிட அனுமதி: விரிவான பின்னணி
அமெரிக்காவின் மினசோட்டா மாகாணத்தில் கஞ்சா பயிரிடவும் வைத்திருக்கவும் ஆகஸ்டு 1ம் திகதியில் இருந்து பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
சட்டப்பூர்வ மசோதாவுக்கு ஒப்புதல்
தனிப்பட்ட தேவைகளுக்காக மட்டுமே கஞ்சா வைத்திருக்க வேண்டும் என்ற விதியையும் மாகாண நிர்வாகம் முன்வைத்துள்ளது. கடந்த மே மாதம் மினசோட்டா சட்டமன்றம் கஞ்சா பயன்பாடு தொடர்பில் மிகப்பெரிய சட்டப்பூர்வ மசோதாவுக்கு ஒப்புதல் அளித்துள்ளதுடன் ஆளும் ஜனநாயகக் கட்சி ஆளுநர் டிம் வால்ஸ் கையெழுத்திட்டுள்ளார்.
@reuters
இருப்பினும் மினசோட்டா மாகாணத்தில் 2025 வரையில் பெரும்பாலான சட்டப்பூர்வ சில்லறை விற்பனை தொடங்காது என்றே தெரிவித்துள்ளனர்.
கஞ்சாவுக்கு சட்டப்பூர்வ அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், பொது பாதுகாப்பு மற்றும் இளைஞர்கள் மீதான தாக்கம் தொடர்பில் அஞ்சும் விமர்சகர்களுக்கு இடையே இந்த விவகாரம் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆனால் கஞ்சா ஆதரவாளர்கள் தரப்பு, மாகாணத்தில் போதைப்பொருளின் தடை தோல்வியடைந்தது என்று வாதிடுகின்றனர். மேலும், மாகாணத்தில் சிறிய குற்றங்களுக்காக கைது செய்யப்படுபவர்கள் வெள்ளையர்களை விட கருப்பின மக்களே அதிகம் என கூறப்படுகிறது.
2 அவுன்ஸ் அளவுக்கு கஞ்சா
அமெரிக்காவில் தனிப்பட்ட காரணங்களுக்காக கஞ்சா பயன்பாட்டை சட்டப்பூர்வமாகிய 23வது மாகாணம் மினசோட்டா. கொலராடோ மற்றும் வாஷிங்டன் இதே அனுமதியை கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னரே வழங்கியிருந்தது.
@reuters
தற்போது 21 வயதுக்கு மேற்பட்ட ஒருவர் கஞ்சா வைத்திருக்கலாம் என்பதுடன் 2 அவுன்ஸ் அளவுக்கு கஞ்சாவுடன் மாகாணத்தில் எங்கேயும் பயணம் செய்யலாம். மட்டுமின்றி, 2 அவுன்ஸ் அளவுக்கு கஞ்சாவை குடியிருப்பிலும் வைத்துக் கொள்ளலாம்.
மட்டுமின்றி, 2025 முதல் Red Lake பூர்வகுடி மக்கள் சில்லறை விற்பனைக்கு களமிறங்க உள்ளனர். சில்லறை விற்பனைக்கு உரிமை கோரும் விண்ணப்பமானது 250 டொலருக்கும் பயிரிடுதல் மற்றும் சந்தைப்படுத்தும் உரிமம் பெற 10,000 டொலர் கட்டணமாக வசூலிக்க உள்ளனர்.
குடியிருப்பில் ஒருவர் 8 கஞ்சா செடிகளை வளர்க்க அனுமதிக்கப்படுகிறது. அதுவும் பொதுமக்கள் பார்வைக்கு படாதவாறு வளர்க்க வேண்டும் எனவும் மாகாண நிர்வாகத்தால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |