உயிருக்கு அஞ்சுகிறார்கள்... உக்ரைன் இராணுவத்தில் வீரர்களைச் சேர்ப்பதில் புதிய சிக்கல்
உக்ரைன் மக்கள் மரணத்திற்கு அஞ்சுவதால், இராணுவத்தில் வீரர்களைச் சேர்ப்பதில் புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உக்ரைன் திணறிவரும்
ரஷ்ய இராணுவத்தின் கொடூரமானத் தாக்குதல் ஒருபக்கம், அதில் தப்பிப் பிழைக்கும் உக்ரைன் வீரர்கள் தங்களுக்குள் மூர்க்கத்தனமாக சண்டையிட்டுக் கொள்வது மறுபக்கம் என உக்ரைன் இராணுவத்தில் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

உக்ரைன் வீரர்களிடையே இப்படியான மூர்க்கத்தனமான தாக்குதல்கள் சமீப காலமாக அதிகரித்து வருவதாகவே உக்ரைனின் இராணுவக் குறைதீர்ப்பாளர் கூறுகிறார்.
மட்டுமின்றி, ரஷ்யாவின் முழு அளவிலான படையெடுப்பின் ஐந்தாவது மற்றும் பெரும் சோர்வை ஏற்படுத்தும் ஆண்டில், போரிடுவதற்காக ஆட்களைத் திரட்ட உக்ரைன் திணறிவரும் நிலையில் இது ஒரு முக்கியப் பிரச்சினையாக உருமாறியுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது ரஷ்யா பரப்பும் வதந்தி அல்ல என குறிப்பிட்டுள்ள அவர், சமீபத்திய தேசிய காவல்துறை சேவையின் அறிக்கை ஒன்றில், இதுவரை ஆட்சேர்ப்பு அதிகாரிகள் மீது 600-க்கும் மேற்பட்ட தாக்குதல்கள் நடந்துள்ளதாகப் பதிவு செய்துள்ளதுடன், இந்த ஆக்கிரமிப்பு அதிகரித்து வரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது என்றும் அந்த அறிக்கையில் எச்சரிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் மாதம் பல ஆள்சேர்ப்பாளர்கள் கத்தியால் தாக்கப்பட்டபோது முதல் பெரும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது, அவர்களில் ஒருவர் மரணமடைந்தார். பின்னர் ஜூலை மாதம் லிவிவ் நகரில், கட்டாய இராணுவச் சேவையிலிருந்து தப்பித்ததாகச் சந்தேகிக்கப்பட்ட ஒருவரைக் கைது செய்ய முயன்ற அதிகாரிகளை சுமார் 200 போராட்டக்காரர்கள் சூழ்ந்துகொண்டு, அவர்களது காரை அடித்து நொறுக்கி கவிழ்த்தனர்.
பணியில் இருக்கும் வீரர்களுக்கு எதிரான வன்முறையை ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கி கண்டித்த நிலையில், இந்தக் கலவரம் செய்திகளில் இடம்பிடித்தது.

முன் வரிசையில் போரிடுவதைக் குறித்த வெளிப்படையான அச்சம் முதல், முடிவே தெரியாத ஒரு போரில் பங்கேற்கத் தயங்குவது வரை இதற்கான காரணங்கள் அமைந்திருப்பதாகத் தெரிகிறது.
முன்னணிக் களத்தை நோக்கி மேற்கொள்ளப்பட்ட ஆரம்பக்கட்ட விரைவான நகர்வுக்குப் பிறகு, 2023-ஆம் ஆண்டின் பிற்பகுதியில் தென்கிழக்குப்பகுதி நிலப்பரப்புகளை மீண்டும் கைப்பற்றுவதற்காக உக்ரைன் ஒரு தீவிரமான எதிர்-தாக்குதலைத் தொடங்கியபோதுதான், ஒரே ஒரு முறை உக்ரைன் மக்களிடையே உற்சாக அலை எழுந்தது.
ஆண்களை வலுக்கட்டாயமாக
ஆனால் அதுவும் நீடிக்கவில்லை. அதன் பின்னரே மூர்க்கத்தனமான ஆள்சேர்ப்பு கட்டம் தொடங்கியது. அதுவும் கடும் பின்னடைவையே ஏற்படுத்தியது.

ஆள்சேர்ப்பாளர்கள் தெருக்களில் மக்களைத் தேடிச் சென்றனர்; சில சமயங்களில் மிகவும் வன்முறைமிக்க முறைகளையும் கையாளத் தொடங்கினர்.
வன்முறை இன்னொரு வன்முறைக்கு காரணமானது. போர்க்களத்தில் ஏற்பட்ட இழப்புகளை ஈடுசெய்ய வேண்டியிருந்ததால், உக்ரைனின் உயர் கட்டளைப் பிரிவு பேருந்துமயமாக்கலைத் தொடங்கியது.
அதாவது ஆண்களை வலுக்கட்டாயமாகப் பேருந்துகளில் ஏற்றி ராணுவப் பணிக்கு அழைத்துச் செல்லும் நடமாடும் ரோந்துப் படைகள் களமிறக்கப்பட்டது.
போர்க்களத்தில் கூடுதலாக 5,000 பேர் தேவைப்படும்போது, ஆள்சேர்ப்பாளர்கள் அப்பகுதி மக்களை வலுக்கட்டாயமாகப் பிடித்துச் செல்லத் தொடங்குகிறார்கள்; அவர்கள் மறுத்தால், அது தெருக்களில் மோதலாக மாறுகிறது.

உக்ரைனின் மனித உரிமைகள் ஆணையர் கடந்த ஆண்டு இது போன்ற 6,000-க்கும் மேற்பட்ட புகார்களைப் பதிவு செய்தார்; இது 2024-ஆம் ஆண்டின் எண்ணிக்கையை விட இரு மடங்கு ஆகும்.
அவற்றில் துன்புறுத்தல் மற்றும் சட்டவிரோதக் காவல் தொடர்பான குற்றச்சாட்டுகளும், ஆள்சேர்ப்பு மையங்களில் நிலவும் மோசமான சூழல் குறித்த புகார்களும் அடங்கும்.
நீண்ட ஐந்து வருடங்களாக நீடிக்கும் போரில் ஆட்கள் பற்றாக்குறை ஏற்படும் நெருக்கடியான சூழலில், எஞ்சியிருக்கும் ஆண்கள் இறப்பதற்கு அஞ்சுவதாகவே தகவல் வெளியாகியுள்ளது. இந்த நெருக்கடி நிலையை உக்ரைன் வெளிப்படையாகவே ஒப்புக்கொள்கிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |