உடனடியாக முகத்தை பளபளப்பாக்க இந்த ஒரு பழம் போதும்: எப்படி பயன்படுத்துவது?
பெண்கள் அனைவரும் முகத்தை பளபளப்பாகவும், பொலிவாகவும் வைத்துக்கொள்ள தான் நினைப்பார்கள்.
ஆனால் முக அழகை கெடுக்கும் விதமாக பருக்கள், கரும்புள்ளிகள், பொலிவற்றதன்மை போன்றவை உண்டாகின்றன.
அந்தவகையில், வீட்டிலிருந்தபடியே முகப்பொலிவை அதிகரிக்க செவ்வாழை ஒன்று போதும்.

எப்படி பயன்படுத்துவது?
முதலில் செவ்வாழையின் பழத்தோலை எடுத்துக் கொள்ளவும்.
பின்னர் இதை மிக்ஸியில் நன்கு அரைத்து முகத்தில் தடவவும்.
பின்னர் நன்கு காய்ந்தவுடன் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவினால் போதும்.

வாழைப்பழ தோலில் வைட்டமின்கள் ஏ, பி மற்றும் சி மற்றும் பைட்டோநியூட்ரியண்ட்கள் நிறைந்துள்ளன.
இதனால் சருமத்தில் உள்ள கரும்புள்ளிகளை நீக்கவும், முகம் பளபளப்பாக வைத்திருக்க உதவியாக இருக்கும்.
இதனை வாரத்திற்கு இரண்டு முறை கட்டாயம் பயன்படுத்த வேண்டும்.
மேலும், இது முகத்திற்கு இயற்கையான முறையில் பளபளப்பை தருவதற்கு உதவியாக இருக்கும்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். | 
 
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                                 
         
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        