சரும பிரச்சனைகள் வராமல் தடுக்க வேண்டுமா? இனி சிவப்பு சந்தனத்தை இப்படி பயன்படுத்துங்க
Beauty tips
Prevent
Skin problems
Red sandalwood
By Balakumar
சரும ஆரோக்கியத்திற்கு சிவப்பு சந்தனம் முக்கிய பங்காற்றுகிறது. உங்கள் சருமம் ஆரோக்கியமான முறையில் காட்சியளிக்க சரும செல்களுக்கு போதிய ஊட்டச்சத்துக்களை இது வழங்குகின்றது.
அதுமட்டுமின்றி சருமத்தில் சொரசொரவென்று இருக்கும் இறந்த செல்களை வெளியேற்றி சருமத்தை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்கும்.
அந்தவகையில் சரும பொழிவை அதிகரிக்கும் சிவப்பு சந்தனத்தை எப்படி பயன்படுத்தலாம் என பார்ப்போம்.
- 2 தேக்கரண்டி சிவப்பு சந்தனப் பொடியை தண்ணீர் சேர்த்து பேஸ்ட் செய்து, தினமும் முகம், கை, கால்களுக்கு தடவி வர, உங்கள் சருமம் நன்கு ஆரோக்கியமாக காட்சியளிக்கும்.
- உங்கள் முகம் எப்போதும் பொலிவிழந்து சோர்வாக காணப்படுகிறதா? அதைத் தடுக்க ஒரு பௌலில் 2 தேக்கரண்டி தயிர் அல்லது பாலை ஊற்றி, அதில் 1 தேக்கரண்டிசிவப்பு சந்தனப் பொடி மற்றும் 1/2 தேக்கரண்டிமஞ்சள் தூள் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 1/2 மணிநேரம் ஊற வைத்து கழுவ வேண்டும்.
- 4 தேக்கரண்டி தேங்காய் பாலில், 2 தேக்கரண்டி பாதாம் எண்ணெய் மற்றும் 4 தேக்கரண்டி சந்தனப் பொடி சேர்த்து கலந்து தினமும் முகத்திற்கு தடவி வந்தால், சருமத்தில் உள்ள தழும்புகள் விரைவில் மறையும்.
- சிலருக்கு முகத்தில் எண்ணெய் அதிகம் வழியும். அத்தகையவர்கள் அந்த எண்ணெய் பசையை நீக்க, 1 தேக்கரண்டி சிவப்பு சந்தனப் பொடியில், 1 எலுமிச்சையின் சாற்றினை சேர்த்து கலந்து, முகத்தில் தடவி சிறிது நேரம் ஊற வைத்து பின் கழுவ வேண்டும். இதனால் சருமத் துளைகள் இறுக்கமடைந்து, எண்ணெய் பசை நீங்கும்.
- வெயிலில் அதிகம் சுற்றி சருமம் கருமையாக இருந்தால், அதனை எளிதில் நீக்க தினமும் 2 தேக்கரண்டி சந்தன பொடியில், தயிர் சேர்த்து நன்கு பேஸ்ட் செய்து, முகம், கை, கால்களில் தடவி 1/2 மணிநேரம் ஊற வைத்து கழுவுங்கள். இதனால் நல்ல மாற்றத்தைக் காணலாம்.
- சிலர் முகப்பருவால் அதிகம் அவஸ்தைப்படுவார்கள் தினமும் சிவப்பு சந்தனப் பொடியை நீர் அல்லது ரோஸ் வாட்டர் சேர்த்து பேஸ்ட் செய்து முகத்தில் தடவி ஊற வைத்து கழுவி வர, அப்பிரச்சினையில் இருந்து விடுபடலாம்.
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US