இலங்கையில் சிவப்பு வானிலை எச்சரிக்கை: மக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தல்
இலங்கையில் நிலவி வரும் மோசமான வானிலை காரணமாக பல பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சிவப்பு வானிலை எச்சரிக்கை
இலங்கையில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலை நிலவரம் காரணமாக நாட்டின் பல பகுதிகளுக்கு சிவப்பு வானிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள இந்த வானிலை எச்சரிக்கையில், மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல், தென் மற்றும் வடக்கு மாகாணங்கள் மற்றும் அனுராதபுரம் ஆகிய பகுதிகள் உள்ளடங்கும்.
இந்த வானிலை எச்சரிக்கை இன்று காலை 9 மணி முதல் அடுத்த 24 மணி நேரத்திற்கு அமுலில் இருக்கும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதி கனமழைக்கு வாய்ப்பு
இலங்கையின் கிழக்கு பகுதியில் உள்ள கீழ் வளிமண்டலத்தில் ஏற்பட்ட குழப்பம் காரணமாக இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது.
இந்த வானிலை அமைப்பு தொடர்ந்து வலுவடைந்து இலங்கைக்கு அருகில் வடமேற்கு நோக்கி நகரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் எச்சரிக்கை விடுக்கப்பட்ட சில முக்கிய பகுதிகளில் 150 மில்லி மீற்றருக்கு மேல் மிக கனமழை பெய்யும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொதுமக்கள் வானிலை அறிக்கை மீது தொடர்ந்து கவனம் செலுத்துமாறும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |