ரூ.10,000 க்கு 5000mAh பற்றரி திறன்: Redmi A3x ஸ்மார்ட்போன் விமர்சனம்!
பட்ஜெட் ஸ்மார்ட்போன் சந்தையில், ஷியோமியின் Redmi சீரிஸ் தனக்கென ஒரு இடத்தை உருவாக்கியுள்ளது. இது இப்போது, புதிய ஸ்மார்ட்போனான Redmi A3x-ஐ வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சிறப்பம்சங்கள்
திரை: வாட்டர் டிராப் நாட்ச் கொண்ட 6.52-இன்ச் HD+ IPS LCD பேனல்
பிராசஸர்: MediaTek Helio G36 SoC
RAM & சேமிப்பு: 32GB/64GB சேமிப்புடன் 2GB/3GB RAM உள்ளிட்ட பல்வேறு கட்டமைப்புகள் இருக்கலாம்.
கேமராக்கள்: இரட்டை பின்புற கேமரா அமைப்பு (8MP பிரைமரி + 0.8MP சென்சார் இருக்கலாம்) மற்றும் 5MP முன் கேமரா
மென்பொருள்: Android 14 (Go பதிப்பு இருக்கலாம்)
பற்றரி: ஸ்டேண்டர்டு 10W சார்ஜிங் கொண்ட 5000mAh
வெளியீட்டு திகதி
Redmi A3x ஏப்ரல் 2024 இல் வெளியாகும் என தகவல்கள் கிடைத்துள்ளன.
எதிர்பார்க்கப்படும் விலை
Redmi A3x ன் விலை பற்றிய எந்த அதிகாரப்பூர்வ தகவலும் இன்னும் வெளியிடப்படவில்லை. இந்தியாவில் Redmi A3x ன் விலை: ரூ.8,000 முதல் ரூ. 10,000 வரை இருக்கலாம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |