ரெட்மி போன்களுக்குத் தடை! இனி இந்தியாவில் இந்த மாடல்கள் விற்பனை செய்யப்படாது
ரெட்மி ஸ்மார்ட்போன் பிரியர்களுக்கு அதிர்ச்சி தரும் விதமாக இந்தியாவில் இனி சில ரெட்மி மாடல்கள் விற்பனை செய்யப்படாது என்று க்ஷியோமி நிறுவனம் அறிவித்துள்ளது.
இதன்படி ரெட்மி நோட் 10 புரோ, ரெட்மி நோட் 10 புரோ,மேக்ஸ் 6ஜிபி, 64 ஜிபி ரேம் மாடல்களின் விற்பனை நிறுத்தப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
க்ஷியோமி வெப்சைட்டிலும் அமேசான் தளத்திலும் இனி இந்த ஸ்மார்ட்போன்கள் கிடைக்காது என்று கூறப்படுகின்றது.
அதுமட்டுமின்றி ஸ்மார்ட்போன் தயாரிப்புக்குத் தேவையான உதிரிப்பாகங்களின் விலை உயர்வைச் சமாளிக்க, சில ஸ்மார்ட்போன்களின் விலையையும் சமீபத்தில் க்ஷியோமி நிறுவனம் உயர்த்தியது.
தற்போது . ரெட்மி நோட் 10 சீரீஸ் ஸ்மார்ட்போனின் விற்பனையும் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் ரெட்மி ஸ்மார்ட்போன் பிரியர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.