தொப்பையை குறைப்பது எளிது! இந்த விடயத்தை தொடர்ந்து செய்தால் போதும்
உடல் பருமன் மற்றும் தொப்பை கொழுப்பு ஆகியவை உடல் அழகுக்கு எதிராக நிற்கும் இரண்டு விடயங்களாகும்.
இது அழகு பிரச்சனையை விட ஆரோக்கிய பிரச்சனை தான்.
உடல் செயல்பாடுகளில் ஈடுபடாமல் நீண்ட நேரம் வேலை செய்பவர்களிடமும், உடற்பயிற்சியின்றி சோம்பேறித்தனமான வாழ்க்கை முறையைக் கடைப்பிடிப்பவர்களிடமும் வயிற்றுக் கொழுப்பு பொதுவாகக் காணப்படும்.
வயிற்றில் உள்ள கொழுப்பு பல உடல்நல பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
இது கல்லீரல் உள்ளிட்ட உறுப்புகளை சேதப்படுத்தக்கூடிய ஒன்றாகும்.
பலரும் அன்றாடம் செய்யும் சில விடயங்களில் கவனம் செலுத்தி, சில பழக்கவழக்கங்களை கடைபிடித்தால், தொப்பையை இலகுவாக குறைக்கலாம்.
தொப்பையை குறைக்க என்ன செய்யலாம்?
சாப்பிடும் போது கவனமாக இருக்கவும். விழுங்க வேண்டாம். இந்த வழிகளை பின்பற்றினால் தொப்பையை குறைக்கலாம்.
நிறைய தண்ணீர் குடிக்கவும், கறிவேப்பிலை, எலுமிச்சை தண்ணீர் மற்றும் சீரக தண்ணீர் போன்ற ஆரோக்கியமான பானங்களையும் குடிக்கவும்.
தினமும் 20 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்யுங்கள். squats, deadlifts, bench press போன்ற பயிற்சிகளை செய்யலாம்.
உங்கள் காலை உணவில் முட்டை, தயிர், ராகி, ஓட்ஸ், பழங்கள், உலர் கொட்டைகள், கொண்டைக்கடலை மற்றும் பட்டாணி ஆகியவற்றைச் சேர்க்கவும்.
இனிப்பு மற்றும் உப்பு குறைக்க. புரதம் மற்றும் நார்ச்சத்து உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |