400,000 புலம்பெயர்ந்தோரை நாடுகடத்துவோம்... பிரித்தானிய கட்சி ஒன்று அறிவிப்பு
தாங்கள் ஆட்சிக்கு வந்தால், பிரித்தானியாவிலிருந்து 400,000 புலம்பெயர்ந்தோரை நாடுகடத்துவோம் என நைஜல் ஃபராஜின் யூகே ரீஃபார்ம் கட்சி தெரிவித்துள்ளது.
400,000 புலம்பெயர்ந்தோரை நாடுகடத்துவோம்
யூகே ரீஃபார்ம் கட்சியின் உள்விவகாரங்கள் செய்தித்தொடர்பாளரான ஸியா யூசுஃப் (Zia Yusuf), பல ஆண்டுகளாக கன்சர்வேட்டிவ் மற்றும் லேபர் அரசுகள் பிரித்தானியாவுக்குள் புலம்பெயர்ந்தோர் அத்துமீறி நுழைவதை வேடிக்கை பார்த்துகொண்டிருந்திருக்கின்றன என்று கூறியுள்ளார்.

திறந்த எல்லைக் கொள்கையை பின்பற்றிய அவர்கள், சட்டத்தை பின்பற்றாமல், பிரித்தானியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்தவர்களுக்கு நன்மை செய்துவந்துள்ளார்கள் என்று கூறும் யூசுஃப், ரீஃபார்ம் கட்சி இந்த கொள்கையை தலைகீழாக மாற்றிவிடும் என்கிறார்.
ரீஃபார்ம் அரசு, கடந்த ஐந்து ஆண்டுகளில் வழங்கப்பட்டுள்ள புகலிடக்கோரிக்கைகளை மீளாய்வு செய்து, நாட்டுக்குள் சட்டவிரோதமாக நுழைந்தவர்கள், விசா காலம் முடிந்தும் தங்கியவர்களின் அனுமதியை ரத்து செய்து அவர்களை நாடு கடத்தும் என்று கூறியுள்ளார் யூசுஃப்.
யூசுஃப் கூறியுள்ள 400,000 எண்ணிக்கை, ஏற்கனவே பிரித்தானியாவில் புகலிடம் வழங்கப்பட்டுள்ளவர்கள் மற்றும் அடுத்த மூன்று ஆண்டுகளில் பிரித்தானியாவுக்குள் நுழையக்கூடும் என எதிர்பார்க்கப்படுபவர்களை அடிப்படையாகக் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |