ஆசிய விளையாட்டு போட்டியில் முதல்முறையாக ஏதிலிகள் அணி
refugees team first time participate in asian games: ஆசிய விளையாட்டு போட்டியில் முதல்முறையாக ஏதிலிகள் அணி இடம் பெற்றுள்ளது.
ஆசிய விளையாட்டு போட்டியில் ஏதிலிகள் அணி
20 வது ஆசிய விளையாட்டு போட்டி ஜப்பானின் ஐச்சி-நகோயா மாகாணத்தில் இன்று தொடங்கி, அக்டோபர் 4 ஆம் திகதி வரை நடைபெற உள்ளது.
இந்தத் தொடரில், 45 நாடுகளை சேர்ந்த சுமார் 11,000 வீரர், வீராங்கனைகள் கலந்துகொள்கின்றனர்.

இந்த ஆசிய விளையாட்டு போட்டியில், முதல் முறையாக ஆசிய ஏதிலிகள் அணியும் பங்குபெற உள்ளது.
இந்த ஏதிலிகள் அணியில், டேக்வாண்டோவில் பங்கேற்கும் 2 விளையாட்டு வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.
Meet Tala Al-Hunaidi and Mahmoud Al Hussein.
— UNHCR, the UN Refugee Agency (@Refugees) September 19, 2026
They’re Syrian refugees living in Jordan and they’re about to make history.
They will become members of the first-ever Refugee Team to compete at an Asian Games. #AichiNagoya2026 pic.twitter.com/eVBvztmyhO
24 வயதான மஹ்மூத் அல் ஜாசிம் அல் முகமது அல் ஹுசைன் ஆடவர் 80 கிலோ கியோருகி பிரிவிலும், 18 வயதான தலாஹ் அல் ஹசன் அல் ஹினிடே மகளிர் 49 கிலோ கியோருகி பிரிவிலும் போட்டியிடுவார்கள்.

சிரியாவை சேர்ந்த இந்த 2 விளையாட்டு வீரர்களும் ஜோர்டானில் உள்ள அஸ்ராக் ஏதிலிகள் முகாமில் வசிக்கின்றனர்.
இருவரில் யாரேனும் தங்கம் வென்றால், பதக்க வழங்கும் விழாவின் போது OCA கொடி ஏற்றப்பட்டு, OCA கீதம் இசைக்கப்படும்.