தேர்தல் முடிவுகள்: புலம்பெயர்ந்தோர், சிறுபான்மையினருக்கு உருவாகியுள்ள அச்சம்
பிரித்தானியாவில் நடந்து முடிந்த தேர்தல்களில், லேபர் கட்சி இங்கிலாந்தில் 1,400க்கும் மேற்பட்ட கவுன்சிலர்களை இழந்துவிட்டது, வேல்ஸ் நாட்டில் ஆட்சியையும் இழந்துவிட்டது.
விடயம் என்னவென்றால், லேபர் வசம் இருந்த கவுன்சில்களில் பெரும்பான்மை யூகே ரீஃபார்ம் கட்சி வசம் வந்துவிட்டன.
புலம்பெயர்ந்தோர், சிறுபான்மையினருக்கு உருவாகியுள்ள அச்சம்
யூகே ரீஃபார்ம் கட்சி, புலம்பெயர்தலுக்கு எதிரான கருத்துக்கள் கொண்ட கட்சி என்பது உலகறிந்த விடயம்.

அக்கட்சியின் தலைவரான நைஜல் ஃபராஜ், புலம்பெயர்ந்தோரை நாடுகடத்துவோம் என்பதை தாரக மந்திரம்போல் கூறிக்கொண்டிருக்கிறார்.
ஆக, இவ்வளவு காலமாக லேபர் அல்லது பிற கட்சிகளால் ஆளப்பட்டுவந்த கவுன்சில்கள் தற்போது புலம்பெயர்தல் எதிர்ப்புக் கட்சியான ரீஃபார்ம் கட்சிவசம் வந்துவிட்டதால், அந்த கவுன்சிகள்களில் வாழும் புலம்பெயர்ந்தோர் மற்றும் சிறுபான்மையினருக்கு அச்சம் உருவாகியுள்ளது.
Brummies United Against Racism என்னும் அமைப்பின் உறுப்பினரான Mus என்பவர், தேர்தல் முடிவுகளால் நாங்கள் ஏமாற்றமடைந்துள்ளோம், ரீஃபார்ம் கட்சி ஆட்சி அமைக்குமானால், கருப்பினத்தவர், நிறம் சார்ந்தவர்கள் மற்றும் புலம்பெயர்ந்தோருக்கு என்ன ஆகும் என்பது எங்களுக்குத் தெரியும் என்கிறார்.
Refugees for Justice என்னும் அமைப்பைச் சேர்ந்த Pinar Aksu என்பவர், நாடாளுமன்றத்திலேயே இனவெறுப்பு காணப்படும் ஒரு அரசியல் யுகத்துக்குள் இப்போது நுழைகிறோம், பிரித்தானிய இஸ்லாமிய சமுதாயத்தினர், தங்கள் அயலகத்தார்கள், தங்களை நாடுகடத்தவேண்டும் என்று கூறும் ஒரு கட்சிக்கு வாக்களித்துள்ளதால், ரீஃபார்ம் கட்சியின் வெற்றியால் பயத்துடனும் கவலையுடனும் இருக்கிறார்கள் என்கிறார்.
ஆக, ரீஃபார்ம் கட்சியின் வெற்றி, பிரித்தானியாவில் வாழும் புலம்பெயர்ந்தோருக்கும் சிறுபான்மையினருக்கும் அச்சத்தை உருவாகியுள்ளது இவர்களுடைய கூற்றுக்களிலிருந்து தெளிவாகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |