என் மகனின் உயிரை காப்பாற்றுங்கள்! கண்ணீர் விட்டு கதறும் தந்தை.. நடந்தது என்ன?
அமெரிக்காவில் தடுப்பூசி செலுத்த மறுத்த நோயாளிக்கு அறுவை சிகிச்சை செய்ய முடியாது என்று மருத்துவ நிர்வாகம் தெரிவித்தது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் Boston நகரில் உள்ள Brigham and Women's மருத்துவமனையில் 31 வயது இளைஞர் ஒருவர் இதய மாற்று அறுவை சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அறுவை சிகிச்சைக்கு பிறகு நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் தேவைப்படும் என்பதால் நோயாளிகள் கண்டிப்பாக கொரோனா தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என்ற கொள்கையை மருத்துவமனை நிர்வாகம் கட்டாயமாக கடைப்பிடித்து வருகின்றது.
ஆனால் அந்த நோயாளியோ தடுப்பூசி செலுத்திக்கொள்ள மறுத்துள்ளார். இதனால் அறுவை சிகிச்சைக்காக காத்திருப்போர் பட்டியலில் இருந்து அவரது பெயர் நீக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து அவரது தந்தை David Ferguson கூறியதாவது, என் மகன் மரணத்தின் விளிம்பில் உள்ளார். அவனை எப்படியாவது காப்பாற்றுங்கள் என்று கதறி வருகிறார். தடுப்பூசி மேல் அவனுக்கு நம்பிக்கை இல்லாததால் அதனை செலுத்த அவனது மனம் ஏற்று கொள்ளவில்லை.
இதனால் மருத்துவமனையில் இதய மாற்று அறுவை சிகிச்சையின் பட்டியலிலிருந்து அவனை நீக்கிவிட்டனர். இதையடுத்து வேறு மருத்துவமனைக்கு மாற்ற முடிவு செய்தேன். ஆனால் அதற்கு அதிக நேரம் இல்லை. அவனது உடல்நிலை மிக மோசமான நிலையில் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.