இஸ்ரேல் வீரருடன் விளையாட மறுப்பு: டோக்கியோ ஒலிம்பிக்கில் இருந்து வெளியேற்றப்பட்ட வீரர்
டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் இஸ்ரேல் வீரருக்கு எதிராக விளையாட மறுத்த அல்ஜீரிய ஜூடோ வீரரை சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்பியுள்ளனர்.
குறித்த வீரர் மீதும் அவரது பயிற்சியாளர் மீதும் துறை ரீதியான நடவடிக்கைகள் பாயும் என தெரிய வந்துள்ளது.
அல்ஜீரிய ஜூடோ வீரரான Fethi Nourine என்பவரே விவாதத்துக்குரிய இந்த முடிவை மேற்கொண்டுள்ளார்.
முதல் சுற்றில் சூடான் வீரரை சமன் செய்த நிலையில், இரண்டாவது சுற்றில் இஸ்ரேலிய வீரருடன் மோத வேண்டிய நிலை ஏற்பட்டது.
ஆனால் Fethi Nourine மற்றும் அவரது பயிற்சியாளர் ஆகிய இருவரும் இதற்கு மறுப்பு தெரிவித்ததுடன், போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்தனர்.
பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக இந்த முடிவை முன்னெடுத்ததாக Fethi Nourine விளக்கமளித்துள்ளார்.
2019ல் நடந்த உலக ஜூடோ சாம்பியன் போட்டியிலும், இதே இஸ்ரேலிய வீரருடன் மோதும் நிலை ஏற்பட்ட போது Fethi Nourine போட்டியில் இருந்து விலகியது குறிப்பிடத்தக்கது.