2021 தமிழக சட்டமன்ற தேர்தலில் மொத்தம் எத்தனை சதவித வாக்கு பதிவானது? இறுதி விவரத்தை வெளியிட்டது தேர்தல் ஆணையம்
தமிழகத்தில் நேற்று நடைபெற்ற 2021 சட்டமன்ற தேர்தலின் இறுதி வாக்கு பதிவு சதவிதத்தை வெளியிட்டது தேர்தல் ஆணையம். தமிழகத்தில் நேற்று 234 தொகுதிகளுக்கான சட்டப்பேரவை தேர்தல் அமைதியாக நடைப்பெற்று முடிந்தது.
கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் தேர்தல் அதிமுக-வினர் திமுக வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாபதி காரை தாக்கியதால் அங்கு பதற்றம் ஏற்பட்டது.
இந்நிலையில், தமிழகத்தில் இறுதியாக மொத்தம் 72.78 சதவிதம் வாக்கு பதிவானதாக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
அதிகபட்சமாக கரூர் மாவட்டத்தில் 83.93 சதவிதமும், குறைந்தபட்சமாக தலைநகர் சென்னையில் 59.06 சதவித வாக்குகளும் பதிவானது.
— Stalin SP (@Stalin__SP) April 7, 2021
தொகுதி படி பார்த்தால் அதிகமாக பாலக்கோட்டில் 87.33 சதவித வாக்குகளும், குறைந்தபட்சமாக சென்னை வில்லிவாக்கத்தில் 55.52% வாக்குகளும் பதிவாகியுள்ளது
மாவட்ட வாரியாக பதிவான இறுதி வாக்கு பதிவு குறித்த தேர்தல் ஆணைய அறிக்கை#TamilNaduElections2021 @AbpTamil https://t.co/SlVwyjVROE pic.twitter.com/XANrxDcDnb
— Raja Shanmugasundaram - தன்னரசு நாட்டுக்காரன் (@SRajaJourno) April 7, 2021
தமிழ்நாட்டில் சட்டப்பேரவைக்கு நேற்று நடைபெற்ற தேர்தலின் இறுதி வாக்கு பதிவு சதவிதத்தை வெளியிட்டது தேர்தல் ஆணையம்
— Raja Shanmugasundaram - தன்னரசு நாட்டுக்காரன் (@SRajaJourno) April 7, 2021
அதன்படி, தமிழகத்தில் 72.78 % வாக்குகள் பதிவு#TamilNaduElections2021 @AbpTamil pic.twitter.com/GupT2l8CMm