முதல் இரவு அறைக்குள் புகுந்த உறவினர்கள்: நாற்காலியில் உறங்கிய புதுமண தம்பதி! வைரல் வீடியோ
மணமக்களின் முதல் இரவு அறையில் உறவினர்கள் புகுந்து இடத்தை ஆக்கிரமித்த சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
எல்லை மீறிய உறவினர்கள்
சமீபத்தில் சமூக ஊடகத்தில் பகிரப்பட்ட வீடியோ ஒன்றில், திருமணமான மணமக்கள் தங்கள் முதல் இரவிற்கு தயாரான நிலையில், உறவினர்கள் முதல் இரவு அறைக்குள் புகுந்த இடத்தை ஆக்கிரமித்து கொண்ட சம்பவம் வைரலாகி உள்ளது.
உறவினர்கள் மணமக்களின் படுக்கையை ஆக்கிரமித்து கொண்டதோடு, தரையிலும் படுத்துக் கொண்டதால், புது மணமக்கள் நாற்காலியில் அமர்ந்து கொண்டு முதல் இரவை கழிக்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
மணமக்களின் தனிப்பட்ட விருப்பத்தை உறவினர்கள் வெளிப்படையாக புறக்கணித்த நிலையில், வீடியோவில் புதுமண தம்பதியினர் மனச்சோர்வுடன் காணப்பட்டதை பார்க்க முடிகிறது.
இணையத்தில் நடந்த சூடான விவாதம்
ஃபூஃபாஜி என்ற என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் முதலில் பகிரப்பட்ட இந்த வீடியோ, 647,000 க்கும் அதிகமான பார்வைகளை விரைவாக குவித்துள்ளது.
அத்துடன் மணமக்களின் தனிப்பட்ட இடத்தை மதிப்பதற்கும், திருமண மரபுகளை கடைப்பிடிப்பதற்கும் இடையிலான சமநிலை குறித்த சூடான விவாதங்களையும் இந்த வீடியோ தூண்டியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |